ரொம்ப நாளா பொண்ணு தேடி
கிடைக்காத ஒருத்தன்...
புதுசா வரன் வந்திருக்குன்னு
பொண்ணு பார்க்க கிளம்புறான்...
காலைல 7:30 லிருந்து 9 நல்ல நேரமாம்..
அதுக்குள்ள பொண்ண பார்த்தா
இந்த தடவ ஓக்கே ஆகிடும்னு நினைச்சி
குடும்பத்தோட காலைல 5 மணிக்கே
எந்திரிச்சி... குளிச்சி ரெடியாகி...
கரெக்ட்டா 7:30 க்கு கிளம்புற மாதிரி
கால் டேக்சியும் புக் பண்ணிட்டான்....
நேரம் ஆகிக்கிட்டே இருக்கும்
கடிகாரத்துல மணி 7:30 ம் ஆகுது
ஆனா... கால் டேக்சி இன்னும் வரல...
லேட்டானா...
நல்ல நேரத்துல பொண்ணு பார்க்க
முடியாம போயிடும்னு
கால் டேக்சி காரனுக்கு கால் பண்ணி
கடுப்புல பேசுறான்...
அதுக்கு கால் டேக்சி காரனோ...
சார்... இன்னைக்குன்னு பார்த்து
காலைலேயே ட்ராஃபிக்...
எப்படியும் இன்னும் 5 நிமிஷத்துல வந்துடுவேன்னு
அடிச்சி பிடிச்சி வாரான்....
இப்ப வண்டி வீட்டு வாசல்ல நிக்குது...
பொண்ணு பார்க்க...
டைம் ஆச்சேன்னு வேக வேகமா
வீட்டுக்குள்ள இருந்து வெளியே வந்த குடும்பம்...
காரில் ஏற....
காரும்... அவங்க வந்த வேகத்துக்கு...
அங்கிருந்து கிளம்புது...
ஆனா.. திருவிழா தேர் மாதிரி
மெல்ல போகுது...
கால் டேக்சி டிரைவர் சொன்ன மாதிரியே
ரோடு ஃபுல்லா பயங்கர ட்ராஃபிக்...
நேரம் ஆகிக்கிட்டே போகுது...
இப்படியே போச்சினா...
நல்ல நேரம் போகுரதுக்குள்ள
அந்த பொண்ண பாக்க முடியாம
போயிடுமோன்னு ஒரு பயம்...
இதுக்கிடையில...
அந்த பொண்ணும் வீட்டுல இருந்து
2 தடவ கால் வந்துடுச்சி
அதுல டென்ஷன் ஆனா
பையனோட அப்பா...
கால் டேக்சி டிரைவர்கிட்ட .
விதிய பாத்தீங்களா சார்...
நாம என்ன தான் கரெக்ட் டைம்னுக்கு
ரெடி ஆகி கிளம்பினாலும்...
அது... அது... நடக்குற படி தான் நடக்குது...
எல்லாம் எங்க தலையெழுத்து...
நமக்கு என்ன எழுதியிருக்கோ...
அத்துப்படி தான் நடக்கும்...
அத யாராலையும் மாத்த முடியாதுன்னு
புலம்ப ஆரம்பிச்சிட்டார்...
இவர் புலம்புறத கேட்க முடியாத டிரைவர்...
எப்படியாவது இறக்கி விட்டா போதும்டா சாமின்னு
சாலை விதியெல்லாம் மீறி.
சில சிக்னல்ல கூட நிக்காம
முடிஞ்சா வரைக்கும் வேகமா போறார்...
அப்பவும் புலம்புறத விடல...
விதிப்படிதான் அப்படி நடக்கும்
விதிப்படிதான் இப்படி நடக்கும்னு
பேசி தள்ளுறார்...
டைம் ஆகிக்கிட்டே இருக்கு...
வண்டியும் போய்க்கிட்டே இருக்கு...
மணி இப்ப 8:55 ஆகுது...
வண்டியும் கிட்டத்தட்ட
அந்த பொண்ணு வீட்டுக்கிட்ட போயிடுச்சி...
ரோட்டுக்கு அந்தப்பக்கம் பொண்ணு வீடு
இந்தப்பக்கம் வண்டி நிக்குது...
சிக்னல்ல யூடர்ன் போட்டு வரணும்னா
எப்படியும் பத்து நிமிஷம் ஆகும்...
அங்கயே இறங்கி ரோட்ட க்ராஸ் பண்ண
5 நிமிஷத்துல போயிடலாம்னு நினைச்சி
குடும்பமே வேக வேகமா இறங்கி
ரோட்ட க்ராஸ் பண்ணாம
ரெண்டு பக்கமும் பார்த்துக்கிட்டு
அங்கயே நிற்குது...
ரோட்டுல வண்டி..
அடுத்தடுத்து போய்க்கிட்டே இருக்கு...
அதப்பார்த்த பார்த்த டிரைவர்...
என்ன சார்... 4 நிமிஷம் தான் இருக்கு
இன்னும் போகாம நிக்கிறீங்க...?
நல்ல நேரம் முடிஞ்சிட போகுது...
சீக்கிரம் போங்க...
பொண்ணு வீட்டுல எல்லோரும் வெயிடிங்ன்னு
விளையாட்டா கேட்க...
அதுக்கு...
எல்லாம் விதிப்படிதான் நடக்கும்..
அத யாராலையும்...
மாத்த முடியாதுன்னு சொன்ன...
அதே பெரியவர்...
ரோட்டுல...
அடுத்தடுத்து நிற்காம போற வண்டிய
பார்த்துக்கிட்டே சொல்றார் ....
முதல்ல உன் வாய கழுவுடா....
கடைசி நேரத்துல... அபசகுனமா பேசிட்டு...
உம்பேச்ச கேட்டு உடனே போனா...
எங்க தலையெழுத்து.. இன்னைக்கே முடிஞ்சிடும்
ஒரு நிமிஷம் நின்னு போறதுல தப்பில்லன்னு
உயிர் பயத்துல பேச ஆரம்பிட்டார்...
********
எல்லாம் விதி என்று நினைப்பவர் கூட...
சில நேரம்...
தன்னை அறியாமல்..
மதியால் வெல்ல முயற்சிக்கிறார்கள்...!!!
********
Written by
Spark Mrl K (க.முரளி)
நன்றி (வாசித்தமைக்கு)