அப்படி என்னத்த சொன்னார்...
ஒரு ஊர்ல இருந்து
ரெண்டு பேர் ஒரே நேரத்துல
வீட்ட விட்டு கிளம்பி
வெளியூர் போறாங்க...
அந்த ஊர்ல இருந்து
வெளியூர் போகணும்னா...
காலைல ஒரு பஸ்...
சாயங்காலம் ஒரு பஸ்...
அத விட்ட
அஞ்சு கிலோமீட்டர் நடந்து தான் போகணும்...
ரெண்டு பேரும் ஒரே நேரத்துல
பஸ்சுக்காக காத்திருக்க...
அங்கு அமர்ந்திருந்த அந்த ஊர் பெரியவர்
அவங்கள பார்த்து கேட்குறார்....
ஏம்பா... ரெண்டு பேரும் ஒன்னா
எங்க கிளம்பிட்டீங்க..?
அதுக்கு ஒருத்தன் சொல்றான்....
“நா... எப்படியாவது எதையாவது சாதிக்கணுங்கற
முடிவோட டவுனுக்கு போறேன்னு...!”
உடனே இன்னொருத்தன் சொல்றான்...
“நா நினைச்ச துறையில ஜெயிக்கணுங்கற
முடிவோட டவுனுக்கு போறேன்னு...!!”
இப்படி ரெண்டு பேரும் சொல்லிமுடிக்க...
பஸ் வருது...
அப்ப அந்த பெரியவர்
அவங்கள பார்த்து
ஒரு குட்டி கதை சொல்றேன்...
அத கேட்டுட்டு போங்கன்னு சொல்லி
“மனசுங்கறது...
கண்ணுக்கு தெரியாத காத்து மாதிரின்னு”...
கதைய சொல்ல ஆரம்பிக்கிறார்...
உடனே
எப்படியாவது சாதிக்கணும்னு நினைக்கிறவன்...
அந்த
பெரியவர் கிட்ட
கதைய கேட்க எனக்கு நேரம் இல்ல...
நா சாதிச்சிட்டு வந்து கேட்டுக்குறேன்னு சொல்லி
வந்த பஸ்சுல ஏறிட்டான்...!
இன்னொருத்தன்
பொறுமையா கதை கேட்டதுனால...
வேற வழியில்லாம
சாயங்காலம் வரைக்கும் காத்திருந்து
அடுத்த பஸ்சுல கிளம்பி போனான்....
நாட்கள் கொஞ்சம் நகருது...
எப்படியாவது முன்னுக்கு வரணும்னு நினைக்கிறவன்...
போகுற போக்குல...
கிடைச்ச வேலைய எல்லாம் செய்யுறான்...!
அதுல கிடைச்ச காசுல வாழ்க்கைய ஓட்டுறான்..!!
இந்த வேலைதான் செய்யனும்னு நினைக்கிறவன்...
அது கிடைக்கிற வரைக்கும்
கிடைச்ச சின்ன சின்ன வேலைய செஞ்சி..!
வாழ்க்கைய ஓட்டுறான்...!!
இப்போ...
நாட்கள் வருடங்களாக மாறுது....
எப்படியாவது முன்னுக்கு வரணும்னு நினைக்கிறவன்
கிடைச்ச வேலைய முழு மனசோட செஞ்சாலும்...
அவன் இடத்துல இருந்து,
அரை அடி கூட முன்னுக்கு வர முடியல...!
ஆனா....
இப்படித்தான் முன்னுக்கு வரணும்னு நினைக்கிறவன்
கிடைச்ச வேலைய அரை மனசோட செஞ்சாலும்...
இருந்த இடந்திலிருந்து
ஒரு படி முன்னுக்கு வந்துட்டான்...!!
இத பார்த்த அவனுக்கு
ஒன்னுமே புரியல...!
அவன் மனசுல...
சின்ன தடுமாற்றம் வர ஆரம்பிக்குது..!!
“என்னடா இது
இத்தனை வேலை செஞ்சும்
முன்னுக்கு வர முடியலையேன்னு...!!!”
கடைசீல கடுப்பாகி
பேசாம ஊருக்கே போய்டலாம்னு தோணுது..
ஊருக்கும் கிளம்பிட்டான்...!
ஊர்ல போய் இறங்குறான்...
அந்த ஊர் பெரியவர்,
அதே பஸ்ஸ்டாப் உக்காந்திட்டு இருக்கார்...
பஸ்ஸ விட்டு இறகுனவன பார்த்து
அந்த பெரியவர் கேட்கார்...
“என்னப்பா...
சொல்லிட்டு போன மாதிரியே
முன்னுக்கு வந்துட்டியா..?”.
அதுக்கு அவன்
“இல்லை”ன்னு சொல்ல
பெரியவர் ஏன்னு கேட்குறார்...
அவன் தெரியலன்னு
பதில் சொல்லிட்டு மெல்ல நடக்க ஆரம்பிச்சான்...
இருந்தாலும் அவன் மனசுக்குள்ள
சின்ன கேள்வி...!
அப்படி என்னத்த சொல்லி அனுப்பி வச்சிருப்பார்னு...!!
கொஞ்ச தூரம் நடந்தவன்
வெக்கத்த விட்டு...
பெரியவர் கிட்டையே வந்து கேட்டுட்டான்.....
அப்படி அன்னைக்கு என்னதான் சொன்னீங்கன்னு.....
அதுக்கு அந்த பெரியவர்
சிரிச்சிக்கிட்டே
நா ஒன்னும் பெருசா சொல்லல....
மனசுங்கறது காத்து மாதிரி...
நம்ம உடம்புங்கறது சின்ன படகு மாதிரி...
இப்ப நீ ஆளே இல்லாத...
ஒரு கடல்ல பயணம் பண்ண போற...!!
உன்னோட லட்சியம்...
கண்ணுக்கு தெரியாத
ஒரு தீவ கண்டுபிடிக்கிறதா இருந்தா...
முன்னோட முழு மனசும்
அந்த தீவ நோக்கியே அடிச்சா...
நீயே லேசா துடுப்பு போட்டாலே போதும்...
அந்த காற்று...
படக தீவுல போய் விட்டுடும்....
ஆனா நீ எந்தப்பக்கம்
துடுப்பு போட்டேன்னு தெரியலையே
கிளம்புன இடத்துக்கே வந்து சேர்ந்துட்டன்னு
கேட்டார்...!!!!
அவனாலா அதுக்கு பதில் சொல்ல முடியல...
“இலக்கு இல்லாத எந்த பயணமும்
முடிவடையாது...!!!!”
- written by Spark MRL K (க.முரளி)
No comments:
Post a Comment