Tuesday, 28 February 2017

ஓட்ட டவுசர்



அன்று ஒருநாள்...
நா பள்ளிக்கு போகயிலே....
எங்காத்தா எனக்கு,
செலவுக்குன்னு ஒருரூபாய்,
கொடுத்தா....

அத...
நா சேத்துவைக்கிறதா நினைச்சி...
ஒருவாரம் கழிச்சி...
ஒருநாள் தொலைச்சிட்டேன்...

தப்பு என்மேல்தான்....

வாரமுழுக்க,
பாத்து பாத்து வச்சிருந்த,
அந்த ஒத்தருபாய் காச...

ஓட்ட டவுசர்ல போட்ட...!
தொலையாம என்ன செய்யும்...!!

அன்று நான்,
தெரியாமல் தொலைத்த,
ஒருரூபாய் நாணயத்தை போல்...

இன்று நாம்
பச்சை என்னும் வண்ணத்தை
தொலைத்து வருகிறோம்...

நிலத்தை...
கூறுபோட்டு விற்பவரிடம்
இடம் வாங்கி...


இன்று நம் பணத்தை சேமிப்பதாக நினைத்து...
இயற்கையை அழித்து வருகின்றோம்...

விரல் விட்டு என்னும்...
காலம் தான் உள்ளது...
நாம் அனைவரும் அந்த...
ஓட்ட டவுசரை போட...

கூடியவிரைவில்
நமக்கே தெரியாமல்...!
நாம் தொலைத்து விடுவோம்...!!
இயற்கையை...!!!

புகைப்படம் எடுத்து வைய்யும்கள்...

நாளை உங்கள்,
சந்ததிகளுக்கு காட்ட...


இதுதான்டா மகனே
"
பச்சை"
என்று...!!!!

மரம் வளர்ப்போம்...

written by க.முரளி (spark MRL K)


பய(ண)ம்



என் தாய் என்னை...
ஈன்றெடுக்கும் போது,
அவள் பெற்ற வேதனையை...
விட,

என் கழுத்தறுபட்டு...
நான்,
சாகும்போது பெறும் வலியை...
விட,

கொடுரமானது...
அந்த பயணம்.

ஒரே இருட்டு...

நான்கு நான்கு பேர்களாக,
அடைபடும் ஒரு...
சின்ன சிறைச்சாலை...
அது.

எனக்கு மேலும்,
எனக்கு கீழும்,
எனக்கு முன்னும் பின்னும்...
பத்து பத்து சிறை...

நடுவில் நான்...

பயணம் சிறிதுதான்...
என் பிறப்பிடத்திலிருந்து,
என் இறப்பிடம் வரை.

என் வாழ்க்கையில் இது...
முதல் பயணம்...
இறுதியும் கூட...!!

கத்தியும் பயனில்லை...
கதரியும் பயனில்லை...

எப்படியும்...
சாகப்போகிறோம்...!!!

இதற்கு நடுவே...
இடிபாடுடன் கூடிய,
இந்த பயணம் எதற்கு...

வருத்தத்துடன் நான்...
பிராய்லர் கோழி.

பயணம்...
கோழிப்பண்ணையிருந்து...
கசாப்புக்கடை வரை...

written by க.முரளி (spark MRL K)

பசி



தூரத்தில் ஒரு
அழுக்குச்சேலைக்காரி
அருகில் சென்றால்
அவளது கையில் ஒருவயது
கைக்குழந்தை....

மயங்கியும்...
மயங்காத நிலையில்...!

அவளின்
வாயில் வார்த்தைகள் இல்லை...
கை மட்டும்,
வேலை செய்கிறது...
மற்றவரிடம் நீட்டி...

அதிலொன்றும்,
ஆச்சர்யமில்லை....

அவள் நிற்பதோ ஒரு...
கையேந்திபவன் அருகில்...
கடையிலோ ஒரே கூட்டம்...!!

அவள் கைநீட்டி காசு...
கேட்குமிடத்தில், மற்றவர்...
காசு கொடுத்து, கையேந்தி...
பவனில் சாப்பிடுவதால்,
கடை உரிமையாளர்க்கு சிறு,
மனஸ்தாபம்...!

இவளால், வாடிக்கையாளர்களுக்கு,
தர்மசங்கடம்...!!

இவளுக்கோ,
சங்கடமேயில்லை...!!!

எப்பொழுதும் அங்கு,
நடக்கும் ஒன்றுதான்...

அவள் அந்த கூட்டத்தினுள்
செல்ல... செல்ல....

அண்ணே கொஞ்சம் சாம்பார்...
அண்ணே இங்க ரசம்...

என்று...
சற்றுமுன் சலசலத்த கூட்டம்,
ஒரே மயான அமைதி...

இதற்கு இடையே
கரக்... முரக்...
என்ற
மெல்லிய சத்தம்...!

ஏம்மா உன் பிள்ளைய
தூக்கிட்டு வெளிய போமா...!!
கடை முதலாளியின் குரல்...!!!

வாடிக்கையாளரின் தட்டில்...
உள்ள...
அப்பளம்,
நாலு பல்லு மட்டுமே...
உள்ள...
குழந்தையின் வாயில்...!!!

பசி...
கைக்குழந்தையையும் திருட...
வைக்கும்...
இதுதான் திருட்டென்று,
அறியாத வயதில்....!!!



பிச்சை...
இல்லா இந்தியா எப்பொழுது...
உருவாகும்...??? 

written by க.முரளி (spark MRL K)

திருநங்கையின் மனசு



உங்க...
ஆசையில,
நான் பிறந்தேன்...!

என்...
ஆசைய,
யாரும் கேட்கல...!!

எனக்கென்ன தெரியும்...!
நான் இன்னாருன்னு...!!
இப்படிதான் வளர்வேன்னு...!!!

அஞ்சு வயசுல...
ஆடையில்லாம அலைஞ்சிருக்கேன்,
தெருவெல்லாம்...!

அப்பகூட தெரியல...
நான் இன்னாருன்னு,
ஊரார்க்கு...!!

இப்ப தெரிஞ்சு போச்சாம்...!
எல்லோர்க்கும்...!!

போன வருசம்,
எங்க ஊர்ல திருவிழா...

ஆண்களெல்லாம்...
பெண் வேசமிட்டு ஆடுவோம்...!

அப்பத்தான்...
ஊர் திருஷ்ட்டி கழியுமாம்...!
அதுதான்
சாமிக்கும் பிடிக்குமாம்...!!

ஆடியபின்...
ஆடையை கலைக்க மனமின்றி,
அமர்ந்தேன் கட்டிலில்...!

வீட்டு திண்ணையிலிருந்து...
அப்பாவின் குரல்...!

"
டேய் பொம்பள வேசத்த...
கலச்சிட்டு,
வேட்டி சட்டைய கட்டிட்டுவாடா...
கோவிலுக்கு போகணும்"

என் தந்தைக்கு...
எப்படி புரியவைப்பேன்...

இனி நான் உடுத்தும்,
ஆடைதான்...
வேசம் என்று...!!!

written by க.முரளி (spark MRL K)



கொலைகார கிராமம்




வெகு நாட்களுக்கு அப்புறம்...
ஒருநாள், இன்று...
செல்கிறேன்.
நான் சிறுவயதில் வாழ்ந்த...
கிராமம் அது...

வெளியூருக்கு செல்லவேண்டும்,
என்றால் கூட...
ஒத்தயடி பாதைதான்...!

முறுக்கு மீசை மாமா
என்றால்...
அன்று எனக்கு பயம்...
இன்று நான் வளர்ந்துவிட்டேன்.

நூறு ஆடுகளை மேய்த்து,
காடு கரையெல்லாம் திரிந்து,
இறுகிப்போன உடம்பு...
அவருக்கு...!

இன்று நான் செல்கிறேன்...
இரவு ஒன்பதுமணி இருக்கும்...
கிராமம் என்றாலே,
சலசலப்பு சற்று குறைவு.
ஒரே அமைதி...!!
இருந்தும்,
தூரத்தில் ஒரு குரல்...

ஆமா...
ராஜேஷ்க்கு என்னாச்சி...
இது என் மாமாவின் குரல்.
ராஜேஷ் என்,
சிறுவயதில் நல்ல நண்பன்...

ராஜேஷ அந்த பைய,
கத்தியால குத்திட்டான்...
படபடத்த குரலுடன் என்
அத்தை...

எனக்கோ அதிர்ச்சி...
நேற்றுகூட,
போனில் பேசுனானே...!!
அருகில் சென்று விசாரிக்கலாம்,
என்றால்...
இருளில் என் கால்...
தடுமாடுகிறது...

அவன் குத்துனத யாரும்...
பாக்கலையா...?
என் மாமாவின் குரல்.
அவன் பொண்டாட்டி பாத்துட்டா...!!
இது என் பெரியம்மாவின் குரல்.

எவ்வளவு பெரிய சம்பவம்...
இதை,
வீட்டு முற்றத்தில்...
சர்வசாதாரணமாக பேசுகிறார்கலே,
இவர்கள்...!!

அவன் சாகட்டும்...
பொண்டாட்டிக்கு பண்ணுன கொடுமைக்கு...!
இது என் மாமா...!!

அதுக்குள்ளயுதான் அவ தம்பி,
ஆஸ்பத்திரிக்கு,
தூக்கிட்டு போய்ட்டானே...

பிறகு,
அவன் பொழச்சானா இல்லையா..?
ஆர்வமாக என் மாமா.

அது திங்ககிழமை தான
தெரியும்...!
அதுக்குள்ளயுதான் தொடரும் போட்டுட்டானே...!!
பாவிங்க.... !!!!

(
டடடைங் டடடைங் என்ற இசையுடன்)

written by க.முரளி (spark MRL K)

கடைசி பரிட்சை




அம்மா...
இன்னைக்கு,
கடைசி பரிட்சை...!

அப்பா...
நாளைக்கே...
நான் பாட்டி வீட்டுக்கு,
போறேன்...!!

டேய்... தம்பி...
இந்த பரிட்சையிலாவது...
பாஸாயிடுடா...!!!
பாசமுள்ள அக்காள்...

அத அடுத்த பரிட்சையில
பாப்போம்...
அஞ்சாப்லேயே
இவ்வளவு படிக்க சொல்லுறாங்க...!

கிடு கிடுவென்று பரிட்சை,
எழுதிய பையன்...
பட படவென்று பள்ளியைவிட்டு,
வெளியேற...
வீடு திரும்பவில்லை...!!

இன்று அவனுக்கு கடைசி...
பரிட்சை..
வாழ்கையிலும் போல...!!!

அய்யய்யோ......
எம்மகனுக்கு என்னாச்சி...
அம்மாவின் அழுகுரல்...!

டேய்...
அப்பா வந்துருக்கன்டா...
எழுந்திருடா...
தந்தையின் பாசக்குரல்...!!

இப்பவாச்சும்,
அப்பா பேச்ச கேளுடா...
எழுந்திருடா...!!!
கண்ணீருடன் அக்காள்...

கதறி அழுதது...
குடும்பம்...!!!

என்னாச்சி...
என்னாச்சி...
சுத்தியிருக்கும் கூட்டம்...!

ரோடு கிராஸ் பண்ணும்போது...
லாரிக்காரன் அடிச்சிட்டானாம்...
கூட்டத்தில் ஒருவர்...

இறுதியில்...
அச்சிறுவனின் ஆசையில்...
பாதி மட்டும்...
நிறைவேற்றப்பட்டது...

உடல்...
பாட்டி வீட்டிற்கு சென்றது...
அடக்கம் செய்ய...!

உயிர்...
எங்கு தேடியும் கிடைக்கவில்லை...!!

தயவு செய்து...
வாகனம் ஓட்டும் போதும்...
சாலையை கடக்கும் போதும்...
கவனமாக செல்லுங்கள்...

இவ்வுளகில்...
விலை மதிக்கமுடியாத...
ஒன்றில்...
"
உயிரும்"
ஒன்று...!!!

கண்ணீருடன் நான்...
கூட்டத்தில் ஒருவனாக...

written by க.முரளி (spark MRL K)

அந்தக் கிழவி


மாத இறுதி...  கையில்,
இருப்போ நூறு ரூபாய்...

அரசு மருத்துவமனை வாசல்...
சுருக்கங்கள் நிறைந்த ஒரு,
கை... என் கையை பிடிக்க...
பக்கென்றானது...

ஏய்... கிழவி...
என்ன வேணும்...?
காசுலாம் இல்ல போ...!
என்று சொல்லிவிடலாம் போல்,
இருந்தது...
உண்மையும் அதுதான்...

என்வாயில் வார்த்தை வருவதற்குள்...
அவள் முந்திக்கொண்டாள்...

தம்பி...
என்னால நடக்க முடியல...
என்ன கைதாங்கலா...
இந்த ஆஸ்பத்திரிக்குள்ள,
கூட்டி போறியா...

சரியென்று அவள் கையை...
நான் பிடிக்க...
நத்தை போல்,
எங்கள் பயணம் தொடர்ந்தது...

ஏங்கிழவி... இங்க,
கூட யாரும் இல்லையா...?

இல்லதம்பி...

உனக்கு எத்தன பசங்க...?
மூனுபேரு...

என்ன பண்ணுறாங்க...?
இரண்டு பசங்க இறந்துட்டாங்க...!
சற்று மெல்லிய குரலில்...

கடைசிபையன் என்ன பண்ணுறான்...?

அவனா....
நான் செத்து பத்து வருசமாச்சுன்னு,
சொல்லிட்டு இருக்கான்,
மாமியார் வீட்டுல...!

தம்பி ஒரு சின்ன,
உதவி...
கோச்சிக்காம பண்ணுவியா...
தழுதழுத்த குரலில்...!

சொல்லு என்ன செய்ய...?
அந்த முக்குல...
ஒரு பொம்பள இட்லி விக்கும்...
ஒரு மூனு இட்லி மட்டும்...?
தயங்கிய குரலில்...

நினைச்சேன்...
கிழவி நம்ம நூறு ரூபாய்க்கும்,
ஆப்பு வைக்கும்னு...!

மொத ரெண்டு பசங்க செத்து,
போய்டாங்கலாம்...!
கடைசி பைய...
அம்மா செத்து போய்டுச்சின்னு சொல்லி..
மாமியார் வீட்டுல இருக்கானாம்...!!

நல்ல புளுவுதுடா..
இந்த கிழவி....

பசிக்குதுனு கேட்டா...
வாங்கி தரப்போறேன்...
அதுக்கு இப்படியா.... 

என்று...
இட்லி கடையை நோக்கி...
எனது கால் நடக்கத்துவங்குவதற்கு,
முன்...

மறுபடியும் கிழவியின் குரல்...

தம்பி.... !!!!

என்ன...?
காசு வாங்காம போறியேயா...
என்றவாறே,
தன் கையை நீட்ட...

கையில் கசங்கிய இரண்டு,
பத்து ரூபாய்த் தாள்கள்...!!

இந்தாயா... காசு...
மாச கடைசி...
உன்கிட்ட காசு,
இருக்குமோ...?
இருக்காதோ...?
இதுல வாங்கிட்டு வாயா...!
ஆமா நீ சாப்டியா தம்பி...?

என் வாயில் வார்த்தைகள் இல்லை...

என்னப்பா அமைதியா இருக்க...
சாப்டியாய்யா...?

இல்ல "பாட்டி"

வாங்கிட்டி வாயா...
சேந்து சாப்புடுவோம்....

அவளும் மூன்று பிள்ளைகளுக்கு,
"
தாய்" தானே...!


உலகத்தில் உள்ள...
அனைத்து தாயின் குணமும்,
ஒன்று தான்... !

"
தன் பிள்ளைகளை பாதுகாப்பது."

பிள்ளைகள் தான் தவறவிடுகிறார்கள்...
தன் தாயை....!!!

ஆமா, இப்ப எங்க பாட்டி இருக்கீங்க..?

அந்த அல்லா கோவில் வாசல்ல,
உக்காந்திருக்கம்பா...

"
பிச்சை எடுத்துக்கிட்டு"

(குறிப்பு : இது என் வாழ்வில் நடந்த ஒன்று...)

written by க.முரளி (spark MRL K)