Tuesday, 28 February 2017

ஏட்டுச்சுரக்காய்



என் சூழ்நிலை...
என்னை அதிலிருந்து பிரித்தாலும்...!

என் தொழில்...
என்னை அதனுடன் சேர்க்கிறது...!!

அன்னைக்கு பத்து வயசு...
அஞ்சாப்பு படிச்சிட்டு இருந்தேன்...

படிச்சிட்டு உம்மகன்...
என்னத்த கிழிக்கப்போறான்...!

பேசாம...
தொழில் சொல்லிக்கொடுப்பியான்னு...!

எவனோ...
எங்கப்பாட்ட சொல்ல...!
எம்படிப்பு பாதீல நின்னுச்சு...!!

அப்பா...
பள்ளிக்கூடத்துல நோட்டுபுக்கு,
ஓசீல தான கொடுக்காங்க...!

நான் படிக்கிறேம்ப்பான்னு...
சொல்ல...!!

இங்க...
வீட்ட அடமானம்வச்சி...!
மாட்ட வாங்கியிருக்கேன்...!!

அத மேச்சா காசுவரும்...
அதவிட்டுட்டு ஓசிக்கு அழையிறன்னு...
அப்பா சொல்ல...!!



தொழில் நல்லாத்தான் போச்சி...!
கொஞ்ச நாளைக்கு...!!

பொழப்பு தேடி...!
பொறந்த ஊரவிட்டு...!!
டவுனுக்கு போகும் நிலை...!!!

அன்னைக்கு...
படிச்சி கிழிச்சிருந்தா...!

இன்னைக்கு...
படிச்சி கிழிச்சவங்ககிட்ட...!!

ஓசில கொடுக்குற புக்க...
காசு கொடுத்து வாங்குற,
நிலமை வந்துருக்காது...

இன்று என் தொழில்...
சைக்கிளில் சென்று...

பழைய பேப்பர் வாங்குறது...!
பழைய நோட்டுபுக் வாங்குறது...!!
பழைய பிளாஸ்டிக் சாமான் வாங்குறது...!!!

பரிட்சை முடியிற வரைக்கும்தான் இங்கு...
பாடப்புத்தகத்துக்கு மதிப்பு...!

ஏட்டுச்சுரக்காய்...
கறிக்கு உதவாதுன்னு...!
சொன்னத செயல்படுத்துறாங்க...!!
நம்ம மாணவர்கள்...!!!

written by க.முரளி (spark MRL K)

No comments:

Post a Comment