Monday, 27 February 2017

என்னுடைய குழந்தை

எதிர் எதிர் வீட்டுல...

இருந்ததால என்னவோ....

எனக்கு அவள பிடிக்கும்...
அவளுக்கும் என்ன பிடிக்கும்...

அடிக்கடி பாத்துப்போம்...!
அவ்வப்போது பேசிப்போம்...!

நாங்க பேசுறது...
அடுத்த வீட்டுக்காரனுக்கு பிடிக்காது...!!

எப்ப பாத்தாலும்...
எங்க ரெண்டுபேர் வீட்டுலையும்...
ஒரே புகார் மழை...!

ஏன்னு கேட்டா...
நாங்க பேசுறது அவனுக்கு... தொந்தரவாம்...!!

ஒருத்தருக்கு ஒருத்தர்...
பிடிச்சிருந்தும்...

என்வீட்டு கதவ தாண்டி...
என்னால போகமுடியல...

அவ வீட்டு கதவ தாண்டி...
அவளால வரமுடியல...

அந்த அளவுக்கு பாதுகாப்பு... எங்களுக்கு...!!

இருந்தும் ஒருநாள்...
எங்க ரெண்டுபேர் வீட்டுலையும்...
முடிவுபண்ணி...

எங்கள சேர்த்து வைச்சாங்க...

எங்க அன்புக்கு அடையாளமாய்...
அவ உண்டானா...
குழந்தையும் பிறந்தாச்சு...

மொத்தம் மூணு குழந்தைங்க...!!
ஒரே பிரசவத்துல...!!!

அதுல ரெண்டு என்னமாதிரி...!
மீதி ஒன்னு அவளமாதிரி...!!

அப்பா என்கிற முறையில்...
அப்பப்ப எட்டிப் பார்ப்பேன்...

எதுத்த வீட்ட....!!!

ஒருவாரம் கழிச்சி ஒருநாள்...!

அதே மாதிரி எட்டிப்பார்த்தேன்...!
குழந்தைய காணும்...!!

என்னாச்சின்னு கேட்டேன்...!

நல்ல விலைக்கு கேட்டாங்கன்னு...!
மூன்றையும் வித்துடாராம்...!!
அவளை வளர்த்த,
எதுத்தவீட்டுக்காரர்...!!!

நாங்க நன்றியோடதான் இருக்கோம்...

எங்கள குட்டிபோடுற இயந்திரமா...
பயன்படுத்திடாங்களே...!!

இந்த... நன்றியுள்ள என்ற வார்த்தையை...
எங்களுக்கு ஏற்படுத்திய மனிதர்கள்...

இப்படிக்கு... நான்...

என்னவளையும்...
என் குழந்தையையும்...
நினைத்து வருத்தப்படும்...

ஒரு சாதாரன...
நன்றியுள்ள நாய்...

written by க.முரளி (spark MRL K)


No comments:

Post a Comment