Tuesday, 28 February 2017

விளையாட்டு




முட்டுச்சந்து தெருவுல...
கடைசி வீட்டு முற்றத்துல...

எப்பவுமே..
நாலஞ்சு பசங்க,
விளையாடுவாங்க...
மாலை நேரத்தில்...

ஆண், பெண் பாலினம்...
அறியா வயது...!

திடீர்னு...
ஒருமாதம் முழுக்க,
ஒளிஞ்சி பிடிச்சி விளையாடுவாங்க...!

திடீர்னு...
ஒருமாதம் முழுக்க,
பழைய சைக்கிள் டயர
உருட்டி விளையாடுவாங்க...!!

புதுசா குடிபோனதுனால என்னவோ...
என்ன மட்டும்,
சேர்த்துக்க மாட்டாங்க...!!

அப்படியே சேர்த்தாலும்,
உப்புக்குச் சப்பானின்னு ஒதிக்கிடுவாங்க...!!!

திட்டம் போட்டேன்...!!!

அப்பா கொடுக்குற காசுல...
அம்பது காச...
அவங்களுக்குன்னு செலவழிச்சேன்...!!

அடுத்த நாள் நானும்...
அவங்கள்ல ஒருத்தன்...!

மாலைநேர விளையாட்டும்,
ஆரம்பமாச்சு...!!

முதல் நாள் என்பதால்...
அதிலொருவன் எனக்கு...
விதிமுறைகளை,
விளக்கிச் சொல்கிறான்...!!

இங்க பாரு...
இங்க இருக்குற
ஒவ்வொரு கட்டத்தையும்...
ஒருகால தூக்கியபடி தாண்டனும்...

கீழ விலுந்தாலும்...
கால் தரையில பட்டாலும்...
நீ அவுட்...!!!!

முதல் முறையில்,
பயமிருந்தாலும்...

கட்டத்தை தாண்டி...
வெற்றி பெற்ற அடுத்தநொடி,
பசங்க மத்தியில் ஒரே சலசலப்பு...!!

இவ நல்ல விளையாடுறான்...!
இவ எங்க டீம்...!!
இல்ல எங்க டீம்...!!!
என்று...

பாவம் பசங்க...
நான் ஒரு ஏமாத்துக்காரன்...!

எப்படி மிட்டாய் கொடுத்து...
விளையாட்டுல சேர்ந்தேனோ...!!

அப்படித்தான் குறுக்குவழியில்...
வெற்றி பெற்றேன்...!!!

எப்போதும் போலத்தான்,
நடந்து அந்த...
கட்டத்தை கடந்தேன்...

ஒரு கால் ஊனமான...
"
நான்"

written by க.முரளி (spark MRL K)

No comments:

Post a Comment