வெகு நாட்களுக்கு அப்புறம்...
ஒருநாள், இன்று...
செல்கிறேன்.
நான் சிறுவயதில் வாழ்ந்த...
கிராமம் அது...
வெளியூருக்கு செல்லவேண்டும்,
என்றால் கூட...
ஒத்தயடி பாதைதான்...!
முறுக்கு மீசை மாமா
என்றால்...
அன்று எனக்கு பயம்...
இன்று நான் வளர்ந்துவிட்டேன்.
நூறு ஆடுகளை மேய்த்து,
காடு கரையெல்லாம் திரிந்து,
இறுகிப்போன உடம்பு...
அவருக்கு...!
இன்று நான் செல்கிறேன்...
இரவு ஒன்பதுமணி இருக்கும்...
கிராமம் என்றாலே,
சலசலப்பு சற்று குறைவு.
ஒரே அமைதி...!!
இருந்தும்,
தூரத்தில் ஒரு குரல்...
ஆமா...
ராஜேஷ்க்கு என்னாச்சி...
இது என் மாமாவின் குரல்.
ராஜேஷ் என்,
சிறுவயதில் நல்ல நண்பன்...
ராஜேஷ அந்த பைய,
கத்தியால குத்திட்டான்...
படபடத்த குரலுடன் என்
அத்தை...
எனக்கோ அதிர்ச்சி...
நேற்றுகூட,
போனில் பேசுனானே...!!
அருகில் சென்று விசாரிக்கலாம்,
என்றால்...
இருளில் என் கால்...
தடுமாடுகிறது...
அவன் குத்துனத யாரும்...
பாக்கலையா...?
என் மாமாவின் குரல்.
அவன் பொண்டாட்டி பாத்துட்டா...!!
இது என் பெரியம்மாவின் குரல்.
எவ்வளவு பெரிய சம்பவம்...
இதை,
வீட்டு முற்றத்தில்...
சர்வசாதாரணமாக பேசுகிறார்கலே,
இவர்கள்...!!
அவன் சாகட்டும்...
பொண்டாட்டிக்கு பண்ணுன கொடுமைக்கு...!
இது என் மாமா...!!
அதுக்குள்ளயுதான் அவ தம்பி,
ஆஸ்பத்திரிக்கு,
தூக்கிட்டு போய்ட்டானே...
பிறகு,
அவன் பொழச்சானா இல்லையா..?
ஆர்வமாக என் மாமா.
அது திங்ககிழமை தான
தெரியும்...!
அதுக்குள்ளயுதான் தொடரும் போட்டுட்டானே...!!
பாவிங்க.... !!!!
(டடடைங் டடடைங் என்ற இசையுடன்)
written by க.முரளி (spark MRL K)
No comments:
Post a Comment