Monday, 27 February 2017

நேரம்



பரபரப்பான நகரம்...

இருபத்தி நாலு மணிநேரமும்
போக்குவரத்து வசதி....

அந்த நகரத்துல ஒருத்தன்...

எது செஞ்சாலும்...
தனக்கு சாதகமாகவே பண்ணுவான்...

வேலைக்காகத்தான்...
சொந்த ஊரவிட்டு...
இந்த ஊருக்கு வந்தான்...

ரொம்ப நாளா அவன்...
எதிர்பார்த்த மாதிரியே...
தேடிக்கிட்டிருந்த ஒரு வேலை...

அவனுக்கு கிடைக்கப்போகுது...!

இன்று அவனுக்கு நேர்காணல்...

காலை ஒன்பது மணிக்கு...
அலுவலகத்துக்கு
வரச்சொல்லியிருக்காங்க...

ஒன்பதுமணினா...
ஒன்பது மணிக்கு போகணும்னு...
அவசியமில்ல....

பத்துமணிக்கு போனாலும்...
உள்ள விடுவாங்க....

நினைச்ச நேரத்துக்கு....
வேலைக்கு போகலாம்...

நினைச்சா கிளம்பி...
வீட்டுக்கு வந்திடலாம்....

இதுதான் அவன்...
நினைச்சமாதிரியான வேலையும் கூட...

அதுக்காகவே...
காலையில எட்டுமணிக்கெலாம்...
கிளம்பி...

அருகில் உள்ள...
பேருந்து நிறுத்தத்துக்கு வந்துட்டான்...

அந்த அலுவலகத்துக்கு செல்ல....
பேருந்தில் அரைமணிநேரம்...
ஆகும்...

முதல் பேருந்து வருது...
அதில் உக்கார இடமில்ல...

இரண்டாவது பேருந்து வருது...
அதுவும் கூட்டமாக இருக்கு....

பேருந்தின் மீது தப்பில்ல...

எப்பொழுதும்...
காலைப்பொழுதில்...
ஒன்பதுமணிவரை ஒரே...
கூட்டமாகத்தான் இருக்கும்...

எல்லோரும்...
வேலைக்கு செல்லும் நேரம்...
என்பதால்...

இவனும் நிக்கிறான்...
பேருந்து நிறுத்தத்தில்....

எதாவது ஒரு பேருந்து...
கூட்டமில்லாமல்...
உக்கார இடம் இருந்தால்...

எப்படியாவது உக்காந்து...
போய்டலாம்ன்னு....

நேரம் ஆகுது...!!

இப்ப மணி எட்டுமுப்பது....
அவன் எதிர்பார்த்த மாதிரி...
பேருந்து இன்னும் வரல....

அதே இடத்தில் நின்றுகொண்டு...
காத்திருக்கிறான்...

எதிர்பார்த்தபடியே பேருந்து...
வருமா என்று....

நேரம் ஆகிக்கொண்டே போகிறது...

இப்பொழுது மணி ஒன்பது...

இவனை ஒருமணி நேரமா...
பாத்துக்கிட்டு இருந்த...
ஒரு பெட்டிக்கடைக்காரர்....

"
தம்பி நானும் பாக்குறேன்...
ரொம்ப நேரமா இங்கயே நிக்குற...
எங்க போகணும்"

என்று கேட்க...

அவனும்...
அதற்கான விவரத்தை சொல்ல...

"
என்னப்பா...
பஸ்ல அரைமணி நேரம்...
நின்னுட்டுப்போக சோம்பேறித்தனம்...
பட்டுட்டு....

பஸ்டாப்புலேயே...
ஒரு மணி நேரமா...
நின்னுகிட்டு இருக்கியே..."

என்று சொல்லி முடிக்க...
அவன் எதிர்பார்த்த காலியான பேருந்து வருது...

அண்ணா பஸ் வந்துருச்சி..
நான் கிளம்பறேன்...

என்று சொல்லிட்டு...
சந்தோஷமா கிளம்பிட்டான்...

நாம எதிர்பாக்குற விஷயம்...
நமக்கு கிடைக்கணும்னா...
காத்திருப்பு அவசியம் தான்...

ஆனா நாம எதிர்பாக்குற ஒன்னு...
நம்ம நேரத்த விட...
அதிகமான மதிப்புள்ளதா இருக்கணும்...

காலம் பொன் போன்றது....

written by க.முரளி (spark MRL K)

No comments:

Post a Comment