புதுசாக் கல்யாணமான ஜோடிக்கு...
ஒருவருடம் கழிச்சி...
ஒரு குழந்தை பிறந்துச்சு...
பிறந்த குழந்தை...
சிறந்த மருத்துவராக்கனும்னு,
அம்மாவின் கனவு...!
பெரிய பொறியாளனாக்கனும்னு,
அப்பாவின் கனவு...!!
நாட்கள் நகர்ந்தது...
குழந்தையும் பள்ளிக்கு போச்சு...
குழந்தை மாணவனானான்...
அவன் எடுத்த மார்க்குக்கு,
டாக்டர் சீட் கிடைக்காதாம்...
அம்மாவின் ஆதங்கம்...!
அப்பாக்கு சந்தோஷம்...!!
நான் சொல்லல
எம்புள்ள பெரிய இஞ்சினியரா
வருவான்னு...!
கல்லூரியிலும் சேத்தாச்சு
முதல் நாள் வகுப்பு...
ஆசிரியரும் வந்தார்..
மாணவனிடம் கேட்டார்...
தம்பி நீ எதுக்கு,
இந்த துறையை தேர்ந்தெடுத்த...
என்று...
அதுக்கு அந்த மாணவனின் பதில்...
நான் எடுத்த மார்க்குக்கு,
இந்த காலேஜ்ல...
இந்த டிப்பார்ட்மெண்ட் தான் சார்,
கிடைச்சது...!
அதான் எடுத்தேன்...!!
மகன் இப்படியிருக்க...
நான் சொல்லல...
எம்புள்ள படிச்சி பெரிய இஞ்சினியரா...
வருவான்னு...!!
அப்பாவின் கனவு...!!
written by க.முரளி (spark MRL K)
No comments:
Post a Comment