எங்கோ பிறந்த நான்...
சந்தர்ப்ப சூழ்நிலையால்...
அவளிருக்கும் வீட்டிற்கு வந்தேன்...!
நான் கறக்கும் பாலில்...
குளிப்பாட்டி...
அவளை அழகுபடுத்துவான்...
அந்த பால்காரன்...
காலை ஒருமுறை...
மாலை ஒருமுறை...
வேலை வாங்கினாலும்...
அவளை தட்டி, தடவிக்கொடுத்து...
வேலை வாங்குவான்...
அந்த பால்காரன்...
நான் நினைத்த நேரமெல்லாம்...
பால் தருகின்றேன்...
இருந்தும்...
அடித்து வேலைவாங்குகின்றான்..
என்னை...
மழை பெய்தால் அதில்...
நனையாமலிருக்க...!
வெயில் அடித்தால் அதில்...
காயமலிருக்க...!!
கூரை மேய்ந்த அறை...
அவளுக்கு...!!!
ஆனால் நான்...
மழையில் நனையவேண்டும்...!
வெயிலில் காயவேண்டும்...!!
இந்த கொடுமையை நான்...
எங்க போய் சொல்வது...!!!
கயிற்றில் கட்டினால்தான்...
சுதந்திரம் பறிபோகும் அவளுக்கு...
கட்டிப்போடவில்லை என்றாலும்...
சுதந்திரம் இல்லை எனக்கு...
கடைசியாக நான்...
ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள...
ஆசைப்படுகிறேன்...
அந்த பால்காரனுக்கு...
அவள் எவ்வளவு தான்...
பால் கறந்தாலும்...!
அதில்...
என்னிடம் கறப்பதை...
கலந்து விற்றால்தான்...!!
"லாபம்"
அந்த பால்காரனுக்கு...!!!
என்று...
ஒரேயிடத்தில் நின்றபடி...!
புலம்பி தள்ளுகிறது...!!
பால்காரன் வீட்டு...
"அடிகுழாய்"
written by க.முரளி (spark MRL K )
No comments:
Post a Comment