Monday, 27 February 2017

திடீர்னு ஒருநாள்



அவன்கூட சேர்ந்ததுல இருந்து...!
எங்க போனாலும்...!!
ஒன்னாத்தான் போவோம்...!!!

காலையில இருந்து...
மாலைவரை அவன்கூடதான்..
என் பொழுதுபோக்கு...!!

ஒருநாள் ஒரு சத்தம்...!

அது...
அவனோட அம்மா...!!

டேய்...
உன்னோட ஃப்ரண்டுங்க வந்துருக்காங்க...
என்னான்னு போய் பாரு...

அவனும் போனான்...

வாடா விளையாட போலாம்னு,
அவனுங்க கேட்க...

சரின்னு இவனும் போய்ட்டான்...
என்ன கூப்பிடாம...!!

எனக்கு சின்ன வருத்தம்...!!!

சில நொடியில்...
இருங்கடா ஒரு நிமிஷம்னு...
திரும்பிவந்து...

என்னையும் விளையாட...
கூப்ட்டு...
நடந்து போனான் பாருங்க...


ஐயோ...!
ராஜ நடைதான்...!!

விளையாட்டுனா சாதாரணமா இல்ல...!

ஓடி பிடிச்சி விளையாடுவோம்...!
அடிச்சி பிடிச்சி விளையாடுவோம்...!!
மரத்துல ஏறி இறங்கி விளையாடுவோம்...!!!


இப்படி இருந்த என்னை...
ஒருநாள் விளையாடும்போது...

எனக்கு சின்னதா...
அடி பட்டுருச்சின்னு...
அங்கயே தூக்கி எறிஞ்சிட்டான்...

என்னதான் இருந்தாலும்...
அந்த இடத்துல...
அவனுக்கு நான்...

ஒரு...!
பிஞ்ச செருப்புதான...!!

written by க.முரளி (spark MRL K)

No comments:

Post a Comment