Tuesday, 28 February 2017

ஆள் பாதி


தனிமனிதனின் தொலைதூர பயணம்...


பேர் தெரியாத ஊரில்...
தன் உயிரை விடனும்...

வாழ்வில் பாதி நாள்...
சேர்த்த பணத்தை...

மீதி நாள்...
இதற்காக செலவிட வேண்டும்...

இது...
அவனது ஆசை...

இப்பொழுது வயது முப்பது...
பயண நாளும் வந்து...

வழியில் தேவைக்கு,

உண்ண உணவும்...
உடுத்த உடையும்...
செலவுக்கு பணமும்...

எடுத்துக்கொண்டான்...

முதல் நாள் பயணம்...
முடிந்த சந்தோஷத்தில்...

இரவில்...
களைப்பின்றி உரங்கினான்...

ஒரு சில நாளில்...
கையிருப்பு சுமையாகத் தெரிந்தது...

ஒவ்வொரு வேளையும்...
உணவின் அளவு குறைந்தாலும்...

எப்படா தீரும் என்ற மனநிலை...

ஆடை பெரிதாக தெரியவில்லை...

போகும் வழியில்...
தூக்கி எறிந்தான்...

சம்பாதித்த பணத்தை...
மனமின்றி செலவழித்தான்...

விரைவில் அனைத்தும் தீர்ந்தது...

இன்று இருப்பது...
அவனிடத்தில்...

உடுத்திய உடை மட்டுமே...

அதுவும்...
அழுக்கு படிந்த நிலையில்...

பசி...

இப்பொழுது தேவை அவனுக்கு...
உண்ண ஒருவேளை உணவாவது...!!!

இறுதியில் வரும் இறப்பை...
நோக்கி பயணித்த அவனுக்கு...

எங்கே விரைவில்...
இறந்துவிடுவோமோ என்ற...
பயம்...!!!

பயத்தில்...
மீண்டும் உழைக்க நினைத்தான்...!!

வழியில் தென்படும் மக்களிடம்...
வேலைகேட்க நினைத்த அவனை...!!

ஒதுக்கியது மக்கள் கூட்டம்...!

தூரத்தில் இருக்கு ஒரு சந்தை...
அங்கு சென்றால் வேலை நிச்சயம்...

கால்கள் வேகமாக நடந்தது...
கண்ணில் பட்ட முதல் கடையில்...

"
அண்ணே எனக்கு எதாவது ஒரு"

என்று சொல்லி...
முடிப்பதற்குள் அவன் கையில்...

ஒரு ரூபாய் நாணயம்
தந்த கடை முதலாளி...

"
இங்க இருந்து போ....
கடயில வியாபாரம் கெட்டு போயிடும்..."

இது...
உழைக்காமல் அவன் பெற்ற...
முதல் சம்பளம்...

உழைக்க நினைத்தாலும்...

அந்த நொடி முதல் தான்...!
அவன் ஒரு பிச்சைக்காரன்...!!

அந்த காச...
திருப்பி தராமலிருந்திருந்தால்...!!!

தந்திருந்தால்...
லட்சியக்காரன்...!!!

ஆள் பாதி...!
ஆடை பாதி...!!

என்று நினைக்கும்...
மனிதற்கிடையே...!!!


written by க.முரளி (spark MRL K)

No comments:

Post a Comment