Tuesday, 28 February 2017

நேசம்


எங்கோ பிறந்த நீ...!

மதிப்பற்று கிடக்கும் என்மேல்...!!
அவ்வப்போது இட்டுச்செல்லும் முத்தத்தால்...!!!

நீ ஈன்றெடுத்த,
உன் குழந்தையை நான் சுமக்கிறேன்...!

அழகான எழுத்தாக...!!

அதை மற்றவர் படிக்க படிக்க...!
நான் வளர்க்கிறேன் நல்லபடியாக...!!!

கவலை வேண்டாம்...!!

இதனால் எழுதுகோலே உன்னால்...!
இன்று நான் மதிப்படைந்துவிட்டேன்...!!

நீ என்மேல் வைத்த நேசத்திற்கு நன்றி...!!!

இப்படிக்கு
வெள்ளைக்காகிதம்...!!

written by க.முரளி (spark MRL K)

No comments:

Post a Comment