Monday, 27 February 2017

கானல் நீர்



உச்சி வெயிலுல... !
தனியா இருக்குறான்...!!

பல மைல் தூரம்...
கடந்து வந்த களைப்பு...!

அவனுக்கு நடக்க தெம்பில்ல...!!!

நாக்கு வறண்டு போச்சி...!
காலு துவண்டு போச்சி...!!

இன்னும் கொஞ்சம் தூரம்தான்...
நடந்தால் இலக்கு வந்துவிடும்...

முடியல... முடியல....
அவனுக்கு தேவை கொஞ்சம் தண்ணி...

செல்லும் வழியை பாத்தான்...
தூரத்துல கானல் நீர்...

அங்கு...
தண்ணீர் இருக்காதுன்னு தெரியும்...!

இருந்தும் நடந்தான்...
கிடைக்க வாய்ப்பிருக்குமான்னு...!!

அங்கு ஒரு பனைமரம்...  தனியா நிக்குது...!

இவன மாதிரியே... அந்த இடத்துல...

மேலே பாக்குறான்..
உச்சியில் தெரியுது நொங்கு...

அவனுக்கு...
மரம் ஏற தெரியாது...!

இருந்தும் முயற்சிக்கிறான்... முடியல...!!!
மீண்டும் முயற்சிக்கிறான்...  முடியல...!!

உயிர் மேல...  ஆசை அதிகம்தான் அவனுக்கு...!

இருக்குற சூழ்நிலையில்...
தண்ணீர் இல்லைனாலும் செத்துடுவான்...

மரம் ஏறத்தெரியாம ஏறி...!
கீழ விழுந்தாலும் செத்துடுவான்...!!

ஒரே ஒரு வாய்ப்புதான்... !!

வெறும் முப்பது அடிக்கு மேல...
அழகாய் காய்ச்சி தொங்குற...
அந்த நொங்கு...

முயற்சி செய்தே ஆகவேண்டும்...

பல மைல் தூரம்...
நடந்த அவனுக்கு...

இந்த...  முப்பது அடி தூரம்...
ரொம்ப கடினமா இருக்கு....

அதுபோல் தான்...
வாழ்க்கையும்...

நான் வாழ்க்கையில..
இவ்வளவு நாள்...
கஷ்டப்பட்டு கடந்து வந்துட்டேன்...

என்னால ஒன்னும்...
செய்ய முடியலனு சொல்லுறத விட...

இலக்கு...  பக்கத்துல தான் இருக்குன்னு...

அத அடைய போராடணும்...!
அதுலதான் சுவாரசியமே இருக்கு...!!


இல்லைனா...!

இவ்வளவு நாள் கடந்ததில்...!!
அர்த்தமில்லாமல் போய்விடும்...!!!

written by க.முரளி (spark MRL K)

No comments:

Post a Comment