Tuesday, 28 February 2017

யாருமில்லா காட்டில்



நானும் ரெம்ப நாளா பாக்குறேன்...
அந்த ஆளை...

யாருமில்லா காட்டுல...
யாருக்கா உழைக்கிறான்...?

அண்ணே...  அண்ணேன்னு...

எத்தனை முறை கூப்பிட்டாலும்...
என் பக்கம் திரும்பி பார்க்கமாட்டார்...!

கொஞ்சம் திமிரு அதிகம்தான்... அவருக்கு...!!

அவருக்குன்னு ஒரு, அழகான காடு...!
அதுல அவருக்கு பிடிச்ச...

விசயமான...  விவசாயம் பாண்ணுறார்...!!

ஆனா... ஒன்னு மட்டும்..
அவர்கிட்ட சொல்ல..
ஆசைப்படுறேன்...!!


அவர் இருக்குற இடம் மாதிரியே...!
அவர் பாக்குற தொழிலும்...!!

மக்களிடம் நஞ்சிபோய்...
செல்லாக்காசாத்தான் உள்ளது...!!!

பாவம்...
அஞ்சு ரூபாய் தாளில் வாழும்..
அவருக்கெங்க தெரியப்போகுது...

இந்தியா ஒரு... விவசாய நாடுங்கறதும்..!!!

அவர் இருக்குற...
அஞ்சு ரூபாய் தாளில் மட்டும்தான்...

விவசாயம் ரெம்ப நாளா...
நடந்துக்கிட்டு இருக்குதுன்னும்...!!


written by க.முரளி (spark MRL K)

No comments:

Post a Comment