Tuesday, 28 February 2017

பறக்கும் முத்தம்


எனக்கு வேலையில்லை...
என்றாலும் மாலை வேளையில்...

ஊர் மரத்தடியில்,
உள்ள கல்லில் சாய்ந்தபடி...
பொழுதைக் கழிப்பாதை வேலையாக வைத்திருந்தேன்...

தினமும் ஆறு மணியளவில்...

என்னை கடந்து செல்லும் அவள்...
என்னைப் பார்த்து...

அவளது வலது கையால்...
தனது நெஞ்சைத் தொட்டு...
ஏதோ சொல்லிக்கொண்டே...

உதட்டின் வழியாக ஒரு...
பறக்கும் முத்தம் ஒன்றை,
இட்டுச்செல்வாள்...!!

அதன் ஈர்ப்பால்...
என்க்கு அவள் மேல்...
காதல் வந்தது...

அவள் காற்றின் வழியாக,
இட்டுச்சென்ற முத்தம் ஒருநாள்...
என் கன்னத்தில் இடவேண்டுமென்று...!

அதற்காக...
ஒரு நாள் மாலை,
அவளை பின்தொடந்தேன்...!

யாருமில்லா இடத்தில்...
அவளை வழிமறித்தேன்...!!

வெளிப்படையாக என் காதலை...
வெளிப்படுத்தினேன்...!!!

அதற்கு அவள் அளித்த பதில்...
ஆட்டிவிட்டது என் அடிமனதை...!

இதுவரை...
என்னிடத்தில் அவள் இட்டுச்சென்ற,
முத்தம் எனக்கில்லையாம்...!!

நான் சாய்ந்து அமர்ந்திருக்கும்,
அந்த கல்லிற்காம்...!!!

விசாரித்ததில் தெரிந்தது...
அது அவளின் இஷ்ட்ட தெய்வமாம்...

ஊரில் உள்ள கல்லையெல்லாம்...
கடவுளாக்கிட்டால்...
அனைத்து முத்தமும் கடவுளுக்கே போய்விடுமோ.......!!!!


written by க.முரளி (spark MRL K) 


No comments:

Post a Comment