Tuesday, 28 March 2017

தெய்வக்குத்தம் ஆகிடுச்சி


ஒரு ஊருல
ரெண்டு வண்டிமட்டும் போய்ட்டு வரக்கூடிய...
சின்ன சாலை ஒன்னு இருக்கு..

திடீர்னு ஒரு பெரிய வண்டி,
திரும்பனும்னாக் கூட
ரோட்டுக்கு இரண்டு பக்கம் இருக்குற
மரம் அதுக்கு இடையூரா இருக்கும்...!!

அத நாலுவழி சாலையா மாத்த
அரசாங்கம் முடிவு பண்ணியது...

ரோட்டுக்கு ரெண்டு பக்கமும் விவசாய நிலம்...
அத அகலப்படுத்தி ரோட்ட போடனும்...
அதுக்கு கிராம மக்கள் ஒன்னும் சொல்லல...

காரணம்... நிலத்துக்கு சொந்தக்காரங்க,
வெறும் நாலஞ்சு பேர்தான் என்பதால்...

கடைசில அந்த சாலைக்கு நடுவுல
ஊர் பொதுக் கோவில் ஒன்னு இருந்தது...
அத இடிச்சி தான்
ரோடு போடா வேண்டிய நிலை...

இல்லைனா கோவில்ல இருந்து
ஒரு கிலோமீட்டர் சுத்திதான் போடா முடியும்னு...
அதுக்கு செலவும் அதிகமாகும்...

ஆனா அதுவரைக்கும் அமைதிகாத்த மக்கள்...
கோவில் என்றதும் ஒன்று கூட ஆரம்பிச்சிட்டாங்க...

கலெக்டர் அலுவலகத்துக்கு
முன்னாடி நின்னு போராடம் பண்றாங்க...

அப்ப ஒரு பெருசு சொல்லுது...

“நாங்கல்லாம் விவசாயிங்க...
வருஷ வருஷம் அந்த கோவில்ல
திருவிழா நடக்குரதுனால தான்...

எங்க ஊருல மழை தண்ணி பேயுது..”
நீங்கவாட்டுக்கு இடிச்சி
அத தெய்வக்குத்தமாக்கி...
எங்க பொழப்புல..."

ஊரெல்லாம் கூடி வந்ததுல்னால
சாலை ஒரு கிலோமீட்டர் சுத்தி போடப்பட்டது...

ஆனா இன்னைக்கு
இந்த ரோட்ட போட்டடு நாலு வருசமாச்சி....

யாரு கண்ணு பட்டுச்சோ தெரியல...

மழை தண்ணி இல்ல...
விவசாயம் செத்துப்போச்சி...

இப்ப அதே பெருசு
கோவில் வாசல்ல நின்னு புலம்புது

அன்னைக்கு எங்க இடத்தைஎல்லாம் கொடுத்து...
உன் கோவில இடிக்காம பார்த்துக்கிட்டோமே...
வருஷ வருஷம் உனக்கு திருவிழா நடத்துரோமே...
உனக்கு இரக்கமே இல்லையா...
இன்னைக்கு நாங்க மழை தண்ணி இல்லாம சாகுரோம்னு...

இவர் எவ்வளவு புலம்பியும்
இவர் கேள்விக்கு... சாமி பதில் சொல்லல...!

எப்படி சொல்லும்...?

வெறும் கட்டிடத்தை காப்பாத்த போராடின இவங்க..

சாலைக்கு ரெண்டு பக்கம் வளர்ந்து நின்ன
கடவுள வெட்ட விட்டுட்டாங்களே...

அப்ப தெய்வக்குத்தம் ஆகத்தான் செய்யும்...!!!

written by க.முரளி (spark MRL K)

Friday, 3 March 2017

தத்துவம் - 2017




இரண்டு பெரிய ஞானிகளின் 
புத்திசாளி சீடர்கள்...
ஒருத்தர ஒருத்தர் 
ஒரு சாலையில் சந்திச்சுக்கிறாங்க...

அப்ப ஒரு பெரியவர் 
அவங்க கிட்ட பிச்சைகேட்க வாரார்...

"
ஐயா தர்மம் எதாவது போடுங்க சாமின்னு"

ஒருத்தன் சொல்றான்....

எங்க குரு அடிக்கடி சொல்லுவார்...
நாம எப்பவும் 
நெருப்பு மாதிரி இருக்கனும்...
ஏன்னா...?

"
அதுதான் எப்பவும் 
நிமிர்ந்து நிற்கும்...!"

இல்லைனா நாமளும் ஒருகாலத்துல 
இந்தமாதிரி பிச்சை எடுக்க வேண்டிய நிலமை 
வந்தாலும் வந்திடும்னு...


உடனே 
இன்னொருத்தன் சொல்றான்

"
இல்ல எங்க குரு சொல்லுவார்...
நாம தண்ணீர் மாதிரி
எப்பவும் மேலிருந்து கீழே 
இறங்கி போக கத்துக்கனும்...

ஏன்னா..?
அதுதான் கொதிச்சி எரியிற 
நெருப்பக்கூட ஈசியா அனைச்சிடும்னு...

அதனால 
இவருக்கு பிச்சை போடுறதுல்ல தப்பில்லா...!

உடனே அவன் சொல்றான்...

நெருப்பு நினைச்சா 
தண்ணீர கூட ஆவியாக்கி மேலே அனுப்பிடுமனு...

உடனே இவன்
ஆனா அந்த ஆவியும் குளிந்தவுடனே
மீண்டும் தண்ணீரா மாறிடும்னு

இப்படி மாறி மாறி பேசினதுல்ல 
ரெண்டு பேருக்கும் சண்டை முத்திப்போச்சி....

இவங்க ரெண்டு பேரும் 
பிச்சை போடுவாங்களா மாட்டாங்களான்னு
ரெம்ப நேரமா பார்த்துட்டு இருந்த 
அந்தப் பெரியவர்....

டேய்... முட்டாப்பயலுகளா...
அடுத்தவன் உபதேசம்
அவன் அவன் இஷ்ட்டத்துக்குத்தான் இருக்கும்...!

முதல்ல
"
நீ... நீயா இரு..."ன்னு
ஒரு பெரிய்ய தத்துவத்த சொல்லிட்டு 
திரும்பி பார்க்காம போய்ட்டார்...

written by க.முரளி (spark MRL K)

கொத்தமல்லிக்கு மட்டும்தான் மதிப்பு



ஒருத்தன் கல்லூரியில் 
நாலு வருசத்துக்கு அப்புறம் வரும்
இண்டர்வியூக்கு முதல் வருசத்துலருந்தே
விழுந்த விழுந்து படிக்கான்...!

அவனுடைய குடும்பம்
வசதியில கொஞ்சம் கம்மிதான்..
இவன் வேலைக்கு போயிதான்
வாழ்க்கைத் தரத்தை உயர்த்தனும்...

கலேஜ்ல எல்லோரும் 
விதவிதமா ட்ரெஸ் போடுவாங்க...

ஆனா இவன் கிட்ட இருக்குறது
மூணு பேண்ட், நாலு சட்டை மட்டும் தான்...

அதத்தான் 
மாத்தி மாத்தி போட்டு போவான்...

நல்லா படிக்கிற பையன் தான்...

எப்படியே 
கஷ்ட்டப்பட்டு காலர்சிப்ள 
படிச்சி முடிச்சப்பின்
அந்த இண்டர்வியூவுக்கு போகுற நாளும் வந்தது...

எல்லோருன் ஒரு அறைக்கு வெளியே இருக்க
ஒவ்வொருவராக உள்ளே போராங்க...
இண்டர்வியூ அட்டன் பண்ண...

நேரம் ஆகிக்கிட்டே இருக்கு
எப்படியும் வேலையா வாங்கியே ஆகனும்னு
இவன் வெறியில இருக்கான்...

இவனோட நேரமும் வந்தது...
உள்ள போறான்...
கேக்குற எல்லாக் கேள்விக்கும் 
நல்லாத்தான் பதில் சொல்றான்...
இருந்தும் வேலை கிடைக்கல...!

இவனுக்கு ஒரே குழப்பம்...
நேரா காலேஜ்ல இருக்குற 
சம்பந்தப்பட்ட வாத்தியார்கிட்ட போய் கேக்குறான்...

அதுக்கு அவர் சொன்ன பதில்...
"
தம்பி நீ நல்லாத்தான் பதில் சொன்ன...!
ஆனா உன்கிட்ட பிரச்ண்ட்டேசன் இல்லையாம்...!!
உன்னோட ட்ரெஸ், ஹேர் ஸ்டைல் எல்லாத்தையும் 
அவங்க பார்ப்பாங்கன்னு..."

அப்பத்தான் ஒரு விசயம் அவனுக்கு புரிஞ்சது...

இங்க ஒரு மணி நேரம் 
கஷ்ட்டப்பட்டு சமைக்கிறவனுக்கு
மதிப்பு இல்ல...!
ஆதுல கொத்தமல்லிய மேல தூவி
அழகா கொடுக்குறவனுக்குத்தான் மதிப்பு...!!

"Presentation is very very important"

அதுனாலதான் 
இங்க படிச்ச பாதிபேர் 
நல்ல வேலைகிடைக்காம...!
வெளிநாட்டுக்கு போறாங்க போல...!!



written by க.முரளி (spark MRL K)

மூன்றாம் தலைமுறை



மூன்றாம் தலைமுறையை சேர்ந்த 
ஒருத்தன் ஒரு கடிதம் எழுதுகிறான்...

பேனா பிடிச்சி எழுதி 
ரொம்ப நாள் ஆனதினால் 
அவனுக்கு கை கொஞ்சம் நடுங்குது....

எங்க தாத்தா, 
ஊரவிட்டு தொலைவில் இருக்கும் 
கருசக்காட்டுல விவசாயம் பண்ணி
எங்க அப்பாவ வளர்த்தார்...!

எங்க அப்பா 
அந்த விவசாய நிலத்தை
விற்று என்னை படிக்க வைத்தார்...!!

இன்னைக்கு நா ஒரு பட்டதாரி...!!!

எங்க அப்பா என்கிட்ட
அடிக்கடி ஒன்னு சொல்லுவார்....

"
நல்லா படிக்கனும்டா மகனே...
படிப்புதான் கடைசி வரைக்கும்
உன் கூட வரும்னு..."

அவர் சொன்னதுக்காகவே 
நா நல்ல படிச்சேன்...

அப்புறம் 
என்னோட கல்யாண பத்திரிக்கையில
என்னோட படிப்ப
என் பேருக்கு அப்புறம் பெருமையா போட்டார்...

இன்று நான் வெளியூரில் 
வேலை செய்கிறேன்...
எங்கப்பா உள்ளூரில் இருக்கிறார்...

ஆனா 
எனக்காக தன்னைவிற்று 
பணம் கொடுத்த நிலம் 
எங்கயும் போகாம அங்கயே இருக்குது...
"
அதிஷ்ட லட்சுமி நகராக"

எதோ 
இன்னும் பத்து வருசம் கழிச்சி அங்க 
ஒரு காலேஜ் வருதாம்...!
ஒரு ரோடு வருதாம்...!!
ஒரு ஹாஸ்பிடல் வருதாம்...!!

ஆனா,
"
விவசாயம் பண்ண
ஒருத்தரும் வரல...."

நா சாகுற வரைக்கும் 
கூட வரும் படிப்புக்கு ஆசைப்பட்டு...!

நா செத்ததுக்கப்புறமும்...
அதே இடத்தில் அமைதியா இருக்கும்
என் நிலத்தை விட்டுட்டேனே...!!

இப்படிக்கு
மூன்றாம் தலைமுறை பட்டதாரி


written by க.முரளி (spark MRL K)

ராஜா ராணி




ஒரு தெருவுல 
ராஜான்னு ஒரு பையனும்...
ராணின்னு ஒரு பொண்ணும்...
இருக்காங்க....

ரெண்டு பேரும் சின்ன வயசுல இருந்து 
ஒன்னாவே படிச்சி...
ஒன்னாவே வளர்ந்தவங்க....

பள்ளிக்கூடத்துல படிக்கும் போது
ரெண்டு பேருன் டியூசன் கூட 
போனதில்ல...

இவன் படிச்சத அவ கிட்ட ஒப்பிப்பான்
அவ படிச்சத இவன் கிட்ட ஒப்பிப்பா...

இவங்க ரெண்டு பேர் பழகுறத பார்த்து 
அவங்க அம்மா, அப்பா 
பலதடவை பேசியிருக்காங்க....

"
நாம... பேசாம ராஜாவுக்கும் ராணிக்கும் 
கல்யாணம் பண்ணி வச்சிடலாம்...
பேர் பொருத்தம் கூட 
அவ்வளவு நல்ல அமைஞ்சிருக்கு..."

உண்மையிலேயே 
ராணிக்கும் ராஜவ ரொம்பப் பிடிக்கும்...!

ரெண்டு பேருக்கும் இப்ப இருபது வயது...

ஒரு நாள் 
ராஜா ராணிக்கிட்ட போய்...
ரொம்ப நேரமா எதைய்யோ சொல்லனும்னு
நிக்கிறான்...
ஆனா சொல்ல மனசு வரல...

உடனே 
ராணி... ராஜாவ பார்த்து...

"
என்னடா ரொம்ப நேரமா
எதைய்யோ சொல்லனும்னு நிக்கிற
ஆனா சொல்ல மாட்டேங்குற...?"

ராஜா ராணிகிட்ட மெதுவா...
"
இல்ல... சுத்தி ஆள் இருக்காங்க...!
சொல்றதுக்கு கொஞ்சம் வெக்கமா இருக்கு...!!

என்றதும் ராணி
"
நாம வேணும்னா மாடிக்கு போய்டலாமா...
அங்க யாரும் இருக்க மாட்டாங்க...!

உடனே இவனும் தலையாட்ட...
ராஜாவும் ராணியும் மாடிக்கு போறாங்க...!

தனி அறை....!
அமைதியான சூழ்நிலை....!!
இவர்கள் இருவர் மட்டும்...!!!

ராஜா கொஞ்சம் தைரியத்த வரவச்சிக்கிட்டு
ராணி கிட்ட சொல்றான்... 

உன்கிட்ட இத சொல்லாம இருக்க முடியல...
இத விட்ட எனக்கு சொல்ல வேற வாய்ப்பு கிடைக்கல...
என்ன கல்யாணம் பண்ணிக்குவியா...?

என்று சொன்னதும்...
ராணிக்கு என்ன சொல்றதுன்னு தெரியல...!
உள்ளுக்குள்ள ஆசை இருக்கு...!!
ஆனா சொல்ல வார்த்த வரல...!!!

உடனே ராஜா...
"
நா தப்பா எதுவும் சொல்லிடலைய்யே...?"
என்றதும்...

"
ம்ம்ம்.... இல்ல... அதுவந்து..."
என்று இழுக்க... 

சீக்கிரம் சொல்லுடி... யாராவது வந்துடப்போறாங்க...!

தப்பு இல்ல தான்... ஆனா....
என்று மறுபடியும் இழுக்க....

ராஜா சந்தோஷத்துல....
வேகமாக ஓட....

ஏய்... எங்க ஓடுற... 

"
இல்ல... நம்ம கூட படிச்சாலே கலையரசி....
பல்லுகூட பச்சரிசி மாதிரி 
வெள்ளையா இருக்குமே...?

"
ஆமா...!!!"

அந்த தெரு முக்குலதான் நிக்குறா...
அவ போகுறதுக்குள்ள 
இத சொல்லிட்டு வந்துடுறேன்....

உடனே ராணி அதிர்ச்சியில்...
"
அப்ப என்கிட்ட சொன்னது"

அதுவா... 
அவ கிட்ட தப்பா எதுவும் சொல்லிடக்கூடாதுல்லா...
அதான் உன்கிட்ட ஒருதடவ ஒப்பிச்சி பார்த்தே....

என்றதும் 
ராணி அந்த தெருமுக்குல எட்டிப்பார்க்க...
அங்கு யாரும் இல்ல...

அவன் மட்டும் தனியா நின்னு... 
இவள பார்த்து சின்னதா ஒரு சிரிப்பு சிரிச்சான்...

***********அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்...

written by க.முரளி (spark MRL K)