Thursday, 2 March 2017

கண்ணியம்



ஒருத்தன் அவசர அவசரமாக
வெளிய கிளம்புறான்...

"
மாப்ள உன் பைக்க 
எடுத்துக்கிறேன்... 
ஒன் ஹவர்ல திரும்பி வந்திடுவேன்..."

"
சாவி ஆணில மாட்டிருக்கு 
எடுத்துக்கோ..."

வண்டிய எடுக்குறான்...
திடீர்னு கைபேசி ஒலி எழுப்ப...

"
சார் இந்தா வந்திடுறேன்...
அரைமணி நேரத்துல வந்திடுவேன்..."

நல்லாத்தான் வண்டி ஓட்டுறான்...
வண்டியில எல்லாமே இருக்கு...

திடீர்னு ஒரு கை
அவனை வழிமறிக்குது...

நிறுத்து
நிறுத்துன்னு...

அவசர அவசரமா 
வண்டிச்சாவிய 
வண்டியில இருந்து எடுத்து...
தன் பேண்ட் பாக்கெட்டில் வைத்துவிட்டு...

"
ஹெல்மெட் எங்க..."

"
சார் அவசரத்துல மறந்து
வீட்டுல வச்சிட்டு வந்துட்டேன்..."

"
லைசென்ஸ் எடு"

அவனும் எடுத்தான்...

"
வண்டி புக், இன்சூரன்ஸ் எடு"

அவனும் எடுத்தான்...

"
வண்டி யாரோடது...?"

"
சார் என் பிரண்டோடது...
அவசரத்துக்கு
அவன்கிட்ட வாங்கிட்டு வந்தேன்..."

"
ஆயிரத்து ஐநூறு பைன
கட்டீட்டு...
உன் பிரண்ட ஸ்டேசனுக்கு வந்து
வண்டிய எடுத்துக்க சொல்லு..."

கொஞ்சம் கண்டிப்பாக
சொல்கிறார் போலீஸ்காரர்...

"
சாரி சார்...
இனிமே போட்டு வந்துடுவேன்...
அவசரத்துல மறந்துட்டேன்..."

"
சாரிலாம்...
இங்க கேக்க கூடாது...
ரூல்ஸ் என்னான்னு தெரியும்ல..."

"
சாரி சார்..."

"
என்ன தண்ணியடிச்சிருக்கியா...
ஏட்டையா இவன கொஞ்சம் செக் பண்ணு..."

"
சார்... 
இல்ல சார்....
கொஞ்சம் அவசரம் சார்... 
பிளீஸ் சார்....
அடுத்த தடவ போட்டு வந்துடுவேன் சார்..."

"
சார்...
இவன் ஓவரா பேசுரான்..."

"
யோவ் ஃபைன போட்டு
அனுப்பி விடுயா...
கோர்ட்டுக்கு நாலு தடவ
அலைஞ்சாத்தான் புத்திவரும்..."

இவன் திருதிருன்னு
பயந்து போய் முழிக்க...

இதுதான் சாக்குனு
அவரு
இவன பாத்து...

"
போய் ஓரமா நில்லு..."

இவனும் போய் நிப்பான்...

ஒரு பத்து நிமிசம் கழிச்சி
மறுபடியும் அவனே முன்வந்து
சார்ன்னு சொல்ற வரைக்கும்
இவங்க கண்டுக்க மாட்டாங்க...

"
சார்..."

"
உன்ன ஓரமாத்தான நிக்க சொன்னேன்..."

"
கொஞ்சம் அவசரம் சார்..."

"
அதுக்கு...."

"
இங்கயே பைன் கட்டிடுறேன் சார்..."

உடனே இந்த ஆபிசர்...
ஓரமா இருக்குற இன்னொரு
ஆபிசர போய் பாக்க சொல்வார்...

இவனும் போவான்...

கைல எவ்வளவு வச்சிருக்க...

இவன் தன்கிட்ட
எவ்வளவு இருந்தாலும்...

நூறு ரூபாய்க்கு மேல
ஒரு ரூபாய்கூட சொல்ல மாட்டான்...

அந்த நூறு ரூபாய...
அந்த வெட்ட வெளியில...

என்னமோ
கஞ்சா பொட்டலத்தை
கசக்கி...
ஒரு கையிலிருந்து 
இன்னொரு கைக்கு
கைமாத்துற மாதிரி...

அந்த நூறு ரூபாய 
கசக்கி கை மாத்துவாங்க...

உடனே 
ஆபிசர் அவன பார்த்து...

இனிமே எல்லாமே சரியா இருக்கனும்னு...
கண்டிச்சி அனுப்புவார்...

அவனும் தப்பிச்சா போதும்னு...
திருந்திட்ட மாதிரி 
தலையாட்டிட்டு போய்டுவான்....

எனக்கு ஒரு சந்தேகம்...
பொதுமக்கள் தப்பு செய்வது இயல்பு...
அத சரின்னு சொல்லல....
அத தட்டி கேட்பது போலீஸோட கடமை...

ஆனா இவ்வளவு நேரம்
ரூல்ஸ் பேசுன போலீஸ்...
தட்டி கேட்டுட்டு
கடைசீல துட்டு கேட்பது..

எந்த அரசியல் சட்டத்துல இருக்குன்னு
எடுத்து காட்ட சொல்லுஙக...

ஒருவேளை 
வெள்ளை சொக்கா போட்டா 
இப்படி யோசிக்க தோணுமோ
என்னமோ...!!

குறிப்பு :
இது கண்ணியமான 
காவல் அதிகாரிக்கு பொருந்தாது...

நான் அவர்களை குறி வச்சு எழுதல...


 written by க.முரளி (spark MRL K)

No comments:

Post a Comment