Thursday, 2 March 2017

செய்யும் தொழில்



சாலையோர செருப்புத் தைக்கும்
தொழிலாளியின் பையன்...

ஒரு பள்ளிகூடத்துல
ஒரு நாள் புதுசா சேர்ந்தான்...

அன்னைக்கு 
முதல் நாள் வகுப்பு...

அவன் குடும்பம் சின்னது...
அவன் குடும்பத்துக்கு ஒரே பிள்ளை...

வருமானம் குறைவுதான்...
தினமும் 
ஐநூறு, ஆயிரம்னு வந்திடப்போறதில்ல...

தினமும்
பத்துபேர் கால்ல உள்ள 
செருப்பு பிஞ்சாத்தான் 
மூணு வேளை சோறு 
வீட்டில் அனைவருக்கும்...

பள்ளிகூடத்துல வந்தவுடனே
வாத்தியார்
எல்லோரையும் பாத்து சொல்றார்...

இது ஆறாம் வகுப்பு...
இதுக்கு முன்னாடி 
எங்க எப்படி படிச்சீங்கன்னு
எனக்கு முக்கியமில்ல...

இங்க ஒழுங்கா படிக்கணும்னு
சொல்லிட்டு...

முதல் நாள் 
முதல் வகுப்பு என்பதால்
முதல்ல எல்லோரும் 
உங்க பேரும் 
உங்க அப்பா என்ன பண்ணுறாங்கன்னு
சொல்லச் சொல்லுறார்..

முதல்ல இருக்குறவன் 
அவன் பேரச்சொல்லி
எங்க அப்பா வாத்தியார்னு 
பெருமையா சொல்றான்...

இப்படி ஒவ்வொருவரும் சொல்வது...
இவன் மனதில்
இடி விழுவது போல் உள்ளது...

எங்க நம்ம அப்பா 
செருப்பு தைக்கார்னு சொன்னா
எல்லோரும் சிரிச்சிடுவாங்கன்னு..

ஏழை வீட்டு பையனா இருந்தாலும்
புத்தி கூர்மையானவன் தான்...

நேரம் ஆகிட்டே போகுது...
ஒவ்வொருத்தரா சொல்லிட்டே வாராங்க...

அவன் வேணுமின்னே
இந்த வீட்டுல பிறக்கல...

அதுக்காக இவருக்கு
மகனா பிறந்துட்டோம்னு வருத்தப்படல...

இந்த இடத்துல 
பொய் சொல்லவும் 
அவன் விரும்பல...

அவனுக்கான நேரம் வந்தது...
எழுந்து நின்னு
அவன் பேர சொல்லி...

"
எங்கப்பா தைக்கிறதுல தான்
நீங்க எல்லோரும் நிற்கீங்க"ன்னு

சொல்லிட்டு கம்பீரமா உக்காந்தான்..

நேர்மையா செய்யுற
எந்த தொழிலும் தப்பில்லை...!

அப்பன் செய்யுற தொழில
கேவலமா நினைக்கிற யாரும்
நல்ல மகனும் இல்ல...!!

written by க.முரளி (spark MRL K)

No comments:

Post a Comment