Thursday, 2 March 2017

ஒரு விவசாயியின் குரல்



நா ஒரு விவசாயிங்க...

அரசாங்கம் சொல்லுச்சி...
ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது...
அது ஒரு மிருகவதைன்னு...

சரி... 
நாம எதுக்கு அரசாங்கத்த பகச்சிக்கனும்னு...

வீட்டுல வளர்த்த காளைமாட்ட
ஊர் பக்கத்துல இருக்குற 
காட்டுல விட்டுட்டு....

"
இனிமே நீ சுதந்திரமா இருக்கலாம்...
உன்ன நாங்க தொல்லபண்ண மாட்டோம்னு
சொல்லி....

நாவாட்டுக்கு திரும்பி பார்க்காம வீட்டுக்கு வந்துட்டேன்...!"

அது என்னடான்னா...
பகலெல்லாம் காட்டுல மேஞ்சிட்டு...
நைட் வீட்டுக்கு வந்துடுச்சி....!!

பாருங்க...
அஞ்சு அறிவுள்ள அதுவே 
இத்தன நாள் வளர்த்த
என் பேச்ச கேடக் மாட்டேன்றுச்சி..."

இந்த பீட்டா யாருன்னே தெரியாது...
அவனுங்க பேச்ச நா ஏன் கேட்கனும்...

நாங்க அப்படித்தான் 
ஜல்லிக்கட்டு நடத்துவோம்....

என்ன நா சொல்றது....?
written by க.முரளி (spark MRL K)

No comments:

Post a Comment