Wednesday, 1 March 2017

இறப்பு



என் உயிர்...
இன்று இவ்வுலகை விட்டு...
பிரிந்தது...

இதோ... என் வாழ்க்கை சரித்திரம்...

நான்... பிறந்ததோ ஒரு முள்ப்புதரில்...

என் வாழ்க்கை பாதிநாள்...
சந்தோஷமாகத்தான் சென்றது...

நினைத்த நேரத்தில் உணவு என...
கிடைத்ததை சாப்பிட்டு உயிர்...
வாழ்ந்தேன்...

எனக்கு சிறுவர்கள் என்றால்...
பயம்...

இன்று காலை...
ஒன்பது மணியளவில் என்... இணையுடன்...

உல்லாசமாக சுற்றித்திரிந்தேன்...

அப்பொழுது நடந்ததுதான்...
அந்த சம்பவம்...

அந்த வழியாக வந்த சிறுவர்கள்...
கையில் கிடைக்கும் கற்களையெல்லாம்...
என்மீது எறிந்தனர்...

அதில் ஒரு கல்...
என் முதுகில்பட்டு நான்...
துடிதுடித்து இறந்தேன்...

நான் என்ன தவறு செய்தேன்...
இப்படி இறப்பதற்கு...

இப்படிக்கு...
ஓணான்

written by க.முரளி (spark MRL K)

No comments:

Post a Comment