Thursday, 2 March 2017

ஆசையாய் ஒரு முத்தம்




அவனும் அவளும் காதலிக்கிறாங்க...

அவன் அவகிட்ட 
போன்ல பேசும்போது

அடிக்கடி 
ஒன்னே ஒன்னு கேப்பான்

ஏய்...
என்னோட வருங்கால
"
பொண்டாட்டி"

ம்ம்ம்...
சொல்லு...

ஒரு முத்தம் குடுடி...

இப்ப முடியாது...

அப்ப எப்பத்தான் கொடுப்ப

நம்ம கல்யாணத்துக்கு
முந்துன நாள் கொடுப்பேன்...

போன்ல தானடி கேட்கேன்...

தரமுடியாது போடா....

ஒன்னே ஒன்னு...

தரமுடியாது என்ன பண்ணுவ...

நாம லவ் பண்ணுறோம்
அதுலாம் தப்பில்ல...

அதுக்கு?

ஒன்னே ஒன்னு குடுடி...

இப்படி 
ரெண்டு பேர் பேசுறதும்...
ரெண்டு பேர் வீட்டுக்கும் தெரிஞ்சிடுச்சி...

இருவரும் 
பக்கத்து பக்கத்து 
வீடு என்பதால்...

வேற வழியே
இல்லாம...

ரெண்டு பேர் வீட்டுலையும்
கல்யாணத்துக்கு ஏற்பாடு
செய்யுறாங்க...

அவசர கல்யாணம் என்பதால்
அவனால் முத்தம் கேக்க முடியல...

கல்யாணம் முடிஞ்ச கைய்யோட
அவன்...

வெளிநாட்டுக்கு 
வேலைக்கு போயிடுறான்...

கிட்டத்தட்ட
அஞ்சு வருடம் கழிச்சி
ஊருக்கு திரும்பி வாரான்...

ஒரு வருசத்துல குழந்தை 
பிறந்ததுனால...

இப்ப குழந்தைக்கு 
நாலு வயசு...

இன்று குழந்தைக்கு 
பிறந்த நாள்...

ஆசை ஆசையாய்
குழந்தைக்கு ஒரு 
குழந்தை பொம்மைய வாங்கி...

அத குழந்தை கையில 
கொடுத்து சொல்லுறான்...

ஹாப்பி பர்த்டேன்னு...

அதுக்கு அந்த 
குழந்த சொல்லுச்சு...

நீங்க என்னவிட 
ஹைட்டா இருக்குறதால
கொஞ்சம் தூக்குங்களேன்னு...

அவனும் ஆசையா தூக்கி...
சொல்லுங்க செல்லம் 
இப்ப எதுக்கு என்ன 
தூக்க சொன்னீங்க...

அதுக்கு அந்த குழந்தை...
அவனுடைய கன்னத்தை திருப்பி
அழகா ஒரு முத்தம் கொடுத்துட்டு
சொல்லுச்சி....

தெங்க்யூ அங்கிள்....

உடனே இவன் பதிலுக்கு
என்ன சொல்றதுன்னு தெரியாம
பேந்த பேந்த முழிக்க...

அவள் 
எல்லாம் தெரிந்தவள் போல்

எப்பப்பாரு அங்கிள்ட்ட 
ஒரே விளையாட்டுன்னு...
குழந்தைய வாங்கிட்டு போய்ட்டா...!!!

இதெல்லாம் தூரத்துல 
இருந்து பாத்துட்டு 
இருந்த 
இவன் பொண்டாட்டி...

எல்லாம் தெரிஞ்சது மாதிரி...

அங்கென்னங்க...
உங்களுக்கு பேச்சின்னு
தரதரன்னு இழுத்துட்டுப் போய்ட்டா...

பாவம்...
பாதி மென்னத
விழுங்கவும் முடியாம...
துப்பவும் முடியாம
இருக்கும் இவன் என்ன செய்வான்
அந்த இடத்துல...

ஆண்மைக்காதல்
பல இடத்துல இப்படித்தான்

திரு திருன்னு 
முழிச்சிட்டு இருக்கு...
பதில் சொல்ல முடியாமல்...

(
லவ் பண்ணுற ரெண்டுபேர்ல
அவனுக்கு இன்னொருத்தி கூடவும்...
அவளுக்கு இன்னொருத்தன் கூடவும்...
கல்யாணம் நடந்த 
இப்படி தான் நடக்கும்....)


written by க.முரளி (spark MRL K)

No comments:

Post a Comment