வெள்ளை வேட்டி... வெள்ளை சட்டை
போட்டதுனாலவோ என்னவோ...
நேற்றுவரைக்கும்
சாதாரண பையனா திரிஞ்சவன்
இன்று ஒருநாள் மட்டும்
புதுமாப்பிள்ளையாய் தெரியிரான்...
அது ஒரு சின்ன கிராமம்...
சுத்தியிருக்குற நாலு கிராமத்துக்கும்
சேத்துவச்சி ஒரு சத்திரம்
கட்டியிருக்காங்க...
அவன் அவள்
பாவாடை தாவணி
போட்ட காலத்திலேயே
அவள காதலிச்சான்...
என்ன அதிர்ஷ்டமோ தெரியல...
அவன் அவகிட்ட
தன்விருப்பத்த சொல்வதற்கு முன்பே...
அவள் முந்திக்கிட்டா....
முறையில
அவள் அவனுக்கு
மொறப்பொண்ணுதான்...
ரெண்டுபேர் வீட்டுலையும்
சொத்துபத்து அதிகம் இல்லைனாலும்...
சொந்தம் விட்டுபோகக்கூடாதுன்னு
சம்மதிச்சிட்டாங்க...
அதனால
இன்று இருவருக்கும்
திருமண நாள்...
"மாப்பிள்ளை தயாராகியாச்சி...
பொண்ண தயார் பண்ணுங்க..."
ஏதோ
தயிர்சாதத்துக்கு ஊறுகாய்
தயார் பண்ணுங்கங்கற மாதிரி...
ஒருத்தர் அப்பப்ப
மணப்பெண் அறைப்பக்கம் வந்து
கத்தீட்டு போவார்...
இதுக்கு பெயர் தான்
கல்யாண அவசரமாம்...
மணப்பெண் தோழிகள்...
அதாவது
பள்ளிக்கூடத்துல
ஒன்னாப் படிச்சவங்க...
அவள அலங்கரிக்கிறாங்க...
ஏய்...
இந்த நெத்திச்சுட்டி
எவ்வளவு அழகா இருக்குடி...
உனக்குன்னே செஞ்சமாதிரி இருக்கு...
அப்புறம்
இந்த ஒட்டியானம்...
இந்த அட்டிகைன்னு...
இந்த கம்மல்னு...
பேசிக்கிட்டே
அலங்காரம் பண்ணுதுங்க
அந்த பொண்ணுங்க...
இதுக்கு இடையில...
எதுத்த வீட்டுல
பக்கத்து வீட்டுல
இரவல் வாங்குன நகைகள்வேறு
அவ கழுத்துல தொங்குது....
இது பத்தாதுன்னு
முன்பின் பழக்கமில்லாத
சிகப்பு சாயம் வேறு
(லிப்ஸ்டிக்)...
ஒருவழியா
அழகா இருந்த
அந்த பொண்ண
கல்யாணப் பொண்ணா தயாரிச்சிட்டாங்க...
மண மேடையில
மாப்பிள்ளை உக்காந்து இருக்காரு...
எப்பவும் போல பொண்ண
கூப்பிட்டு வரச்சொல்றாங்க....
பொண்ணும் வருது...
வந்து மாப்பிள்ளை பக்கத்தில
உக்காருது...
எப்பவும் இல்லாம
அப்ப மட்டும்
மாப்பிள்ளைக்கு பொண்ண
திரும்பி பாக்க வெக்கம்...
தாலியும் கட்ட சொல்றாங்க...
தாலி கட்டும்போது
பொண்ணு முகத்த பாக்குறான்...
ஆனா சத்தியமா சொல்றேங்க...
இதுதான் உண்மை...
இதுக்கு அவ
பாவாடை தாவணிலேயே வந்து
உக்காந்திருக்கலாம்னு
அவனுக்கு தோனிருக்கும்...
இங்கதான் அழகுல மயங்கி
கல்யாணம் பண்ணுறவங்கலாம்
யோசிச்சிருப்பாங்க....
நாம தப்பு பண்ணிட்டோமோன்னு...
பெண்ணுக்கு
அலங்காரம் அழகல்ல...!
பெண் என்றாலே
அவள் அழகுதான்...!!
written by க.முரளி (spark MRL K)
No comments:
Post a Comment