Wednesday, 1 March 2017

மைதானம்


அவனுடைய பழைய நினைவுகள்... 

சின்னவயசிலிருந்து வாழ்ந்த 
அவனது 
ஊர் பொது மைதானம்... 

அன்றைய பொடுசுகள்லாம் 
அங்கதான் விளையாடும்... 

வாரத்தின் முதல்நாள்.... 
அங்கு திருவிழா கூட்டம்தான்... 

ஐந்து வயதிலிருந்து... 
இருபத்தைந்து வரை... 

அனைவருக்கும் அதுதான், 
கூடும் இடம்... 

நானும் அதிலொருவன்... 

ஒருபக்கம் பார்த்தா கிட்டி விளையாட்டு... 
மறுபக்கம் பார்த்தா கோலி விளையாட்டு... 
தூரத்துல கேட்கும் ஐஸ்பால்னு... 

இப்படி பல விளையாட்டுக்கள்... 

காலை... 
மதியம்... 
இரவு... 

என, 
உண்ணும் உணவைக்கூட 
மறக்கச்செய்யும் இடம்... 

எங்கம்மா அடிக்கடி சொல்லும்... 

"
டேய்.. எப்பப் பார்த்தாலும் 
களத்திலேயே கிடக்கியே... 

அந்த இடமாடா உனக்கு 
சோறு போடப்போவுது... 

வந்து ஒரு வாய் 
சாப்ட்டு போயா"ன்னு... 

"
அந்த மைதானத்த 
எங்க ஊர்ல களம்னுதான் சொல்லுவோம்..." 


சொன்னாலும் சொல்லலேனாலும் 
அந்த இடம்தான் எனக்கு சோறுபோட்டுச்சி 
நான் வளர்ந்ததுக்கப்புறம்... 

இன்று எனக்கும் ஒரு 
பையன் இருக்கான்... 

அவனும் 
அதே இடத்துலதான் 
வாரத்தின் முதல்நாள் 
விளையாடப்போவான்... 

அன்று நாங்க அடைஞ்ச சந்தோஷத்த... 
இன்று அவன் அடைஞ்சானான்னு தெரியல... 

அன்று பல விளையாட்டு... 
இன்று ஒரே விளையாட்டு... 

அத நல்லா விளையாண்டாத்தான் 
அவனுக்கு மதிப்பு... 

மத்த பசங்க மத்தியில... 

அது "கிரிக்கெட்" 

நாங்க விளையாடும்போது ஏற்பட்ட 
சத்தம் மாதிரியே... 
இதுலையும் சத்தம் கேக்கும்... 

என்ன அது... 
அருகாமையில் உள்ள வீட்டிலிருந்து வரும்... 

"
யாருடா என் வீட்டு 
ஜன்னல் கண்ணாடிய உடைச்சது"ன்னு வரும்... 

இத கேட்கும் போது 
எம்பையனுக்கு கோபம் வரும்... 

எனக்கு வராது... 

என்னதான் இருந்தாலும்... 
எனக்கு சோறுபோட்ட இடமாச்சே... 

நான்... 
'
இடத்தரகர்'... 


 written by க.முரளி (spark MRL K)

No comments:

Post a Comment