Thursday, 2 March 2017

காதல்




அவனும் அவளும் காதலிக்கிறாங்க...

அவ தான் அவன்கிட்ட
முதல்ல
காதல சொன்னா...

அடிக்கடி போன்ல பேசுவாங்க...
அப்படி ஒருநாள்...

ஹலோ...

ம்ம்ம்... சொல்லுடி....

என்ன பண்ற...

சாப்டுட்டு இருக்கேன்...

என்ன சாப்பாடு...

இவன் தட்ட பாக்குறான்...
அதுல 
நாலு இட்லியும் 
தொட்டுக்க கொஞ்சம் சட்னியும் இருக்கு...

பிரியாணிடா செல்லம்....

உடனே அவ
அந்தப் பக்கத்துல இருந்து...

சிக்கன் பிரியாணிதான சாப்புடுற...

எப்படி டி...
கரெக்டா சொல்லுற...

எனக்கு தெரியும்... 
நான் இங்க இருந்தாலும்...
எம்மனசு பூரா அங்கதான இருக்கு...

ஆமா
எனக்கு பிரியாணி கிடையாதா...?

உடனே இவன்
இந்தப் பக்கத்துல இருந்து...

போன் வழியா கொடுக்க முடியாதுன்னு
தெரிஞ்சும்...

ஆ... காட்டு ஊட்டி விடுறேன்... 

உடனே அந்தப்பக்கம்...
ஆ... ஆ.. ஆ...

இவன் தன் தட்டில் இருக்கும்...
இட்லியில் கொஞ்சம் பிச்சி...

ஊட்டி விடுற மாதிரி போய்...
தன்னோட வாய்ல போட்டுக்குறான்...

எப்படி டி இருந்துச்சி...

ஸ்ஸ்... ஆ..ஆ... 
கொஞ்சம் காரம் ஜாஸ்திதான்...

உடனே இவரு... 

மாமனுக்கு காரம்னா உசுரு...

அப்ப கல்யாணத்துக்கு அப்புறம்
அள்ளி போட்டுடுறேன்...
மொளகா பொடிய....

ஆமா.... 
நீ என்னடி பண்ணிட்டு இருக்க...

ம்ம்ம்....
எக்ஸ்சாமுக்கு படிச்சிட்டு இருக்கேன்...

என்றவாறே
தன் அறையில் 
துவைத்த துணிகளை 
மடித்துக்கொண்டிருக்கிறாள்...

அவனின் அருமைக் காதலி...!!

இது 
இன்றைய காதல்...!!!

written by க.முரளி (spark MRL K)

No comments:

Post a Comment