Thursday, 2 March 2017

எது மிருக வதை..?



ஒரு நாள்...
கோவில் யானையும்
வீட்டு மாடும் பேசிக்கொண்டது....

யானை சொல்லிச்சி...
மாட்டை பார்த்து....

காட்டுல 
சுதந்திரமா சுத்தி திரிந்த என்னை... 
சங்கிலியால் 
ஒரே இடத்தில் பல வருசம் கட்டிவச்சி....
திடீர்னு ஒரு நாள் 
திருவிழா நடத்தி அலங்காரம் பண்ணி
தெருத்தெருவா சுத்த விடுராங்க....
மீதி நேரம் தெருவுல பிச்சையெடுக்க வைக்காங்க...
அது கொடுமையா தெரியல....

கேட்டா கலாச்சாரம்னு சொல்றாங்க...

ஆனா 
உன்ன சின்ன வயசுல இருந்து
சுதந்திரமா வளர்க்காங்க....

பெத்த பிள்ளை மாதிரி உனக்கும்
பேரு வைச்சி அழைக்காங்க....

திடீர்னு ஒருநாள்
உன்கூட சந்தோஷமா 
ஊரே ஒன்னுகூடி விளையாடுராங்க
அது கொடுமையா தெரியுதாமாம்...!

அப்ப ஜல்லிக்கட்டு 
கலாச்சாரம் இல்லையா...?

அதுக்கு அந்த மாடு
சிரிச்சிக்கிட்டே சொல்லிச்சாம்....

"
லூசுப்பயலுக....
பீடா போட்டுக்கிட்டு
பீட்டா பேச்ச கேட்குற பயலுகலுக்கு 
என்ன தெரியும் நம்மல பத்தி....!

என் தோலுல செஞ்ச சூவா மாட்டிக்கிட்டு....
என் தோலுல செஞ்ச பெல்ட்ட போட்டுக்கிட்டு...
எனக்கே துரோகம் பண்றானுங்க...!!

நீ கவலப்படாத....
எனக்காக போறாடும் என் சொந்தங்கள்...
நிச்சயம் உனக்காகவும் போறாடும்....!!!
என்று...

****************
நாங்க வளர்க்கும் 
என் விவசாய நண்பனுடன்
நாங்க விளையாடுவது 
மிருக வதை என்றால்....

அதே மட்டை அடிமாடாக 
மாற்ற நீனைத்து...
நீங்க பண்ற செயலுக்கு
என்ன பெயர்...?

written by க.முரளி (spark MRL K)

No comments:

Post a Comment