Wednesday, 1 March 2017

ரவுடி



அவனும் ஆத்திரத்தில 
அப்படி பண்ணியிருக்ககூடாது... 

இவனும் கோபத்துல 
இப்படி செஞ்சிருக்கக்கூடாது... 

சரி, செஞ்சிட்டான்... 
சராசரி மனிதனான இவன் 

பதிலுக்கு பதில் 
பழிவாங்கிட்டான் அவன்... 

இப்படி கோபத்துல செஞ்சிட்டோமேன்னு 
இடிந்துபோய் உக்காராமல்... 

காவல் நிலையத்தில் 
கவுரவமாக தஞ்சம் அடைஞ்சான்... 

அன்று சனியென்பதால் 
மறுநாள் ஞாயிறு விடுமுறை... 

திங்கள் நீதிமன்றத்தில் 
தீர்ப்புகள் வழங்கப்பட்டது... 

ஒரு ஆண்டு சிறையும்... 
ஒரு ஆயிரம் ரூபாய் அபராதமும்... 

நாட்களை எண்ணத்தொடங்கினான்... 
கடைசி நாளை நினைத்து... 

சிறையென்றால் 
சிறு சிறு கஷ்டங்கள் 
சில நாட்கள் இருக்கத்தான் செய்யும்... 

அப்புறம் 
அதுவே பழகிவிடும்... 

சீக்கிரத்தில்... 

அவன் நினைத்த 
அந்த கடைசி நாளும் வந்தது... 

தண்டனை அனுபவித்து விட்டு 
தன்னலம் அற்ற மனிதனாக 
தன்னடக்கத்தோடு வெளிவந்தான்... 

இன்று 
அவனுக்கென்று ஒரு சிறு தொழில்... 

அதில் 
வரும் வருமானத்தில் 
வாழ்க்கையை ஓட்டுகிறான்... 

திடீரென்று ஊரில் ஒரு கலவரம்... 

அதில் இவனும் கைதியாக 
காவலர்கள் முன்பு... 

ஏன்னு கேட்டா 
எதுத்து பேசுறியான்னு சொல்லுறாங்க... 

விசாரிச்ச போதுதான் தெரியுது... 

ஊரில் உள்ள பழைய ரவுடிகள் 
பட்டியலில் நானும் ஒருவனாம்... 

சிறைக்கு சென்றவனெல்லாம் 
ரவுடியா...? 

அன்று 
தீர்ப்புகளை திருத்தி எழுதியிருந்திருக்கலாம்... 

திருந்தி வாழ்பவர்களை... 
திரும்ப தொந்தரவு செய்யாதே என்று...
Bottom of Form

written by க.முரளி (spark MRL K)

No comments:

Post a Comment