Thursday, 2 March 2017

வேலைக்காரி



"செல்வி 

சாப்ட பாத்திரத்த கழுவிட்டியா..."

"ம்ம்ம்.. கழுவிட்டேம்மா.."

"
அப்படியே மறக்காம சாருக்கு
கேரியர்ல சாப்பாடு வச்சிடு..."

"
ம்ம்ம்... சரிம்மா...."

"
வேலைமுடிச்சி
வீட்டுக்கு போகும்போது
அந்த அயன்வண்டி கடையில
இந்த துணிய கொடுத்துடு..."

ஒரு பெண்
தன்னோட கணவன்
திடீர்னு அதிகமாக சம்பாதிச்சி
திடீர் பணக்காரன் ஆனதுனால...

தன்னோட வீட்டுவேலையை
பகிர்ந்துக்க வேலைக்காரி வேணும்னு
பக்கத்து வீட்டுக்காரிகிட்ட சொல்லுறா...

இன்னொரு பெண்
தன்னோட புருசனுடைய பெட்டிக்கடையில
வருமானம் இல்லைன்னு
வேற வழியில்லாம
வீட்டுவேலைக்காவது போகணும்னு...

இவ தன் 
பக்கத்து வீட்டுக்காரிக்கிட்ட 
சொல்லி வைக்கிறா...

அந்த பக்கத்து வீட்டுக்காரி சொல்லி
இந்த பக்கத்து வீட்டுக்காரி மூலம்
இவ 
அவ வீட்டுக்கு 
வேலைக்கு போயிருக்குறா...

அந்த புதுப்பணக்காரி
அடிக்கடி தன் தோழிங்ககிட்ட 
போன்ல பேசுவா...

பேசாம...
உன் புருசன
என் புருசன் கூட 
சேர்ந்து பிசினஸ் பண்ண 
சொல்லுடி...

ஒரு லட்சத்துக்கு 
லேண்ட் வாங்கி வித்தா
எப்படியும் லாபம் 
ரெண்டு லட்சம் கிடைக்கும்னு...

வேலைக்காரியோட பையனுக்கும்
பணக்காரியோட பையனுக்கும்
ஒரே வயசுதான்...

இப்பதான் பள்ளி முடிச்சி 
கல்லூரி போறாங்க...

கல்லூரியில 
கல்வி உதவித்தொகைக்கு
படிவம் தாராங்க
அந்த பசங்களுக்கு...

இத வீட்டுல நிரப்பி
அம்மாப்பாட்ட கையெழுத்து வாங்கணும்னு
வாத்தியார் சொல்லுறார்...

ரெண்டுபேர் வீட்டுலையும்
படிவம் நிரப்பப்படுது...

வேலைக்காரி வீட்டுல 
ஆண்டு வருமானம்
இரண்டு லட்சம்னு நிரப்பப்படுது...

பணக்காரி வீட்டுல 
ஒரு லட்சத்த தாண்டல...

ஏன்னு கேட்டா, 
ஓசில வரும் காச 
ஏன் விடணும்னு சொல்றா
தன் பையன்ட்ட...

இந்த படிவத்துல 
வேலைக்காரி பணக்காரியா
மாறிட்டா....

பணக்காரி 
பிச்சைக்காரியாகிட்டா...

written by க.முரளி (spark MRL K)

No comments:

Post a Comment