Thursday, 2 March 2017

விசிட்டிங் கார்டு




அந்த ஊரில் 
ஒவ்வொரு தெருவுலையும்...
ஒவ்வொரு நாள் எங்களுக்கு வேலை...

அதை...
சரியாக செஞ்சாத்தான்... 
சரியான நேரத்துல எங்களுக்கு
வேலை வரும்...!

அப்படி ஒருநாள் 
ஒரு தெருவுல என் வேலைய
செய்ய ஆரம்பிச்சேன்...

திடீர்னு ஒரு கை
என் பின்புறமிருந்து 
என் தோளைத் தொட...
திரும்பி பார்த்தால்...

"
டேய்... இங்க என்னடா பண்ற..
பத்து படிக்கும் போது
ஸ்கூல்ல பார்த்ததோட சரி..."
என்றவுடன்...

நீ என்னடா பண்றன்னு 
நா பதிலுக்கு கேட்க...

"
கடவுள் புண்ணியத்துல
ரியல் எஸ்டேட் பண்ணிட்டு இருக்கேன்...
நல்ல போயிட்டு இருக்கு..."

என்றவுடன்...
அவசர அவசரமாக 
தன் பையில் இருந்து 
ஒரு கார்டை எடுத்து... அதை,
என் கையில் கொடுத்து...

"
தப்பா எடுத்துக்காத...!
ஒரு சின்ன வேலை...!!
இது என்னோட கார்டு...
ஃபிரியா இருக்கும் போது 
கால் பண்ணு..."

என்றவாறே 
அவன் கிளம்பிச்செல்ல...

விட்ட வேலையை மீண்டும் ஆரம்பித்து,
வீடு வீடாக வீசிச் சென்றேன்...
கை நிறையா வைத்திருந்த,
எனது கார்டை...!!!

"
செப்டிக் டேங்க்
கிளீன் பண்ண 
எங்களுடைய எண்ணிற்கு 
கூப்பிடுங்க...!! என்று....

இந்த இரண்டிற்கும் பெயர்
"
விசிட்டிங் கார்டு" தான்...!!!

காட்டை அழித்து சுத்தம் செய்யும்
வேலையை விட...!
வீட்டை சுத்தம் செய்யும் 
வேலை மேலானதுதான்...!!


written by க.முரளி (spark MRL K)

No comments:

Post a Comment