Thursday, 2 March 2017

வரும்... ஆனா வராது....




ரெண்டு கிழவிங்க பேசிக்கிட்டாங்க...
ஒரு கிழவி சொல்லுது....

"
ஏன் டி.. பேச்சியம்மா... 
சொத்து தகராருல 
உம்புருஷன் செத்துப்போய் 
இருபது வருசமாச்சி...

கொலைபணணுனவ இன்னாருன்னு 
உனக்குத் தெரியும்....
கோர்ட்ல கேஸ் நடக்குதே...
அவனுக்கு தண்டனை கிடைக்குமா..?"

அதுக்கு இந்தக்கிழவி செல்லிச்சி...

"
அடி போடி போக்கத்தவளே...
கோர்ட்ல வாய்தா வாய்தான்னு இழுத்தடிச்சி...
வீட்டுக்கும் கோர்ட்டுக்கும் 
நடந்து நடந்து என் செருப்பு தேஞ்சதுதான் மிச்சம்..."

உடனே அந்தக்கிழவி...

"
ஆமா அடுத்த வாய்தா எப்ப..?

அதுக்கு இந்தக்கிழவி....

"
கொன்னவனே போனவாரம் 
வயசாகி செத்துப்போயிட்டான்...
இனமே எதுக்குடி வாய்தா...!!."

இது இன்றைய இந்திய நீதிமன்றத்தின் நிலை....

ஏழைங்க கேஸ் போட்டா 
தீர்ப்பு வர பலவருஷம் ஆகுது...!

பணக்காரன் கேஸ்போட்டா...
கிழங்கு சாப்ட்டு 
அடக்கமுடியாம பின்வழியா வெளிவரும்
குசு மாதிரி புசுக்குன்னு தீர்ப்பு வருது...!!

பணம் பத்தும் செய்யும்னு சொல்லுவாங்க...
ஆனா இங்க பதினொன்னும் செய்யும்...
இன்றைய இந்திய அரசிடம்.... 

பீட்டா கிட்டா...
அவ்வளவ்வு பணம்மா இருக்குது....?



written by க.முரளி (spark MRL K)

No comments:

Post a Comment