Thursday, 2 March 2017

குஞ்சாமணி



அஞ்சு வயசுப்பையன்
அந்த தெருவுல துருதுருன்னு இருப்பான்...

யார் பார்த்தாலும் அவனை... 
தூக்கிவச்சி கொஞ்சிவாங்க....

அவனுக்கு ஒரு தாய்மாமா...
மாமான்னா அவனுக்கு
கொஞ்சம் பயம்...!

காரணம்...
ஒரு நாள் சேட்டை செய்யும்போது...
அவன தூக்கிவச்சி
அவனோட அம்மா முன்னாடியே...

"
இனிமே சேட்டை செஞ்சே...
உன் குஞ்சா மணிய கருப்புக் காக்காட்ட
பிடிச்சிக்கொடுத்துடவேன்..."னு
மிரட்டிட்டார்...!!

"
ஏண்டா அவன பயமுறுத்துறே"ன்னு...
எல்லோரும் சிரிக்க ஆரம்பிச்சிட்டாங்க...

அன்னைல இருந்து இன்னைவரைக்கும்...
மாமான்னா பத்தடி தள்ளி நின்னுதான்
பேசுவான்....

ஒரு வருசம் போச்சி...
இப்ப அவனுக்கு வயசு ஆறு ஆச்சி

எல்.கே.ஜி... யூ.கே.ஜி 
படிக்க பள்ளிக்கூடத்துக்கு
போகமாட்டேன்னு அடம்பிடிச்சதுனால...

இப்ப நேரடியா 
ஒன்னாம் வகுப்புல போய்
சேர்த்துவிட்டுடுறாங்க....

புது வகுப்பு... புது பசங்க....

ஒருநாள் பள்ளிக்கூடத்தில் 
இவனுக்கு இன்னொருத்தனுக்கும்
சண்டை...!

பழக்க தோசத்துல...
டீச்சர் வந்ததக்கூட கவனிக்காம...

"
இனிமே என் கிட்ட சேட்டை செஞ்ச....
உன் குஞ்சாமணிய கருப்புக் காக்காகிட்ட 
பிடிச்சிக்கொடுத்துடுவேன்னு...
சொல்லி வாய மூடல

பின்னாடி இருந்து 
சொத்துன்னு ஒரு அடி...
"
கெட்ட வார்த்தை பேசுவியா..."ன்னு

இவனுக்கு ஒன்னும் புரியல...!
கம்முன்னு அழுதுட்டு
சாயங்காலம் வீட்டுக்குப் வந்துட்டான்...!!
அந்த ஆறுவயசு பையன்...!!!

அவனுக்கு எப்படி தொரியும்...?

இந்த சமூகத்துல கெட்ட வார்த்தைய...

"
சின்னவங்க முன்னாடி பெரியவங்க
பேசினா தப்பில்ல...

பெரியவங்க முன்னாடி சின்னவங்க
பேசினா தான் தப்புன்னு..."

கெட்ட வார்த்தைய... யார் பேசினாலும் அது கெட்ட வார்த்தை தான...?



written by க.முரளி (spark MRL K)

No comments:

Post a Comment