Thursday, 2 March 2017

ஓட்டல்



லோகு சார்...
தன்னோட சொந்த வேலை விசயமா
வெளியூருக்கு போறார்...

போன இடத்துல 
அவருக்கு பசி...

கை நிறைய காசிருப்பதால்...
வாய்க்கு ருசியா
சாப்பிட ...

ஓட்டல் இருக்கான்னு 
தேடுறார்...

கொஞ்ச தூரம்
தேடுன பிறகு
ஒரு ஓட்டல் 
அவர் கண்ணுல படுது...

உள்ளே போறார்...
ஒரு இடத்துல உக்காந்த உடனே
இலை போடப்படுது...

"
சார் என்ன சாப்புடுறீங்க..."

"
என்ன இருக்கு"

"
சிக்கன் பிரியாணி, 
மட்டன் பிரியாணி,
வறுத்த மீன்
அவிச்ச முட்டை"ன்னு
அடுக்கீட்டே போனார்....

இவர் அதுல இருந்து
தனக்கு வேண்டியதை 
கேட்டு வாங்கி சாப்பிடுறார்...

காசு இருக்குற தைரியத்தில்
வயிறு முட்ட முட்ட திங்கிறார்...

பதினஞ்சி நிமிச 
போராட்டத்துக்கு பிறகு
அவருடைய இலை மூடப்படுது...

ஒரு சின்ன ஏப்பம்...
வயிறு நிறைஞ்ச சந்தோஷம்...

"
சார் பில்லு"ன்னு 
சப்ளையர் வாறார்....

ஏப்பம் விட்ட வாயுடன்
சப்ளையரிடம் 
நம்ம லோகு சார் கேட்கிறார்...

"
தம்பி கை கழுவுற இடம்
எங்க இருக்கு...?"

"
சார்.. நேரா போய்
லெப்ட் கட் பண்ணுனா 
இருக்கும்"னு

சப்ளையர் 
வாயிலிருந்து வார்த்தை வந்தாக்கூட...

அவர் மைண்ட் வாய்ஸ் 
சொல்லும்...

"
மவனே...
இதெலாம் சாப்புடறதுக்கு முன்னாடி
கேக்கனும்டா"ன்னு...

நம்மள்ள எத்தனை பேர்
லோகு சார்னு தெரியல...

அப்படி இருந்தா சாப்பிடறதுக்கு 
முன்னாடி கை கழுவிக்கோங்க...

இல்லனா இப்படி தான்
மனசுக்குள்ள 
கழுவி கழுவி ஊத்துவாங்க...!
டிப்ஸ் கொடுத்தாக்கூட...!!

written by க.முரளி (spark MRL K)

No comments:

Post a Comment