Thursday, 2 March 2017

ஒருமைப்பாடு




பெரிய பள்ளிக்கூடம்...
திங்கள் கிழமை
காலையில் ஒன்பதுமணி...

பசங்க எல்லோரும் 
மைதானத்தில் ஒன்றுகூட....
ஒலிப்பெருக்கியில் ஒரு சத்தம்....

"
ஸ்கூல்ல்ல்.... அட்டேன்சன்...
ஸ்கூல்ல்ல்.... ஸ்டேண்டர்ட்டிஸ்....
ஸ்கூல்ல்ல்.... அட்டேன்சன்..."
என்று சொல்லிமுடித்தவுடன்...

கடவுள் வாழ்த்து பாடப்பட்டது...
பின் கொடியேற்றம்...

ஒருமாணவன்
அனைவருக்கும் முன் நின்று
உறுதி மொழி என்று சொல்லவும்
எல்லோரும் நெஞ்சில் கைவைக்க...

"
இந்தியா என் தாய்நாடு...
இந்தியர் யாவரும் என் உடன்பிறந்தோர்...
என் தாய்த்திரு நாட்டை உளமார நேசிக்கின்றேன்..."
என்று உறுதி மொழியெடுக்க...

இறுதியாக,
தேசியகீதம் ஒலிக்க ஆரம்பித்தது...

மைதானம் முழுவதும் மயான அமைதி...

அனைவரும் நேரக நிற்க...
தேசிய கொடிமட்டும் காற்றில் ஆடியது...

பாடலும் முடிந்தது...

கடைசியாக...
"
ஸ்கூல்ல்ல்.. டிஸ்பஸ்..."
என்றவுன் 
அனைவரும் அமைதியாக
களைந்து செல்ல...

அனைவரது சாதிச் சான்றிதழ்களும் 
பள்ளி அலுவலகத்தின் 
ஒரு சின்ன அறையில்
ஒற்றுமையாக முடங்கிக்கிடக்கிறது...

"
இந்தியா என் தாய்நாடு...
இந்தியர் யாவரும் என் உடன்பிறந்தோர்..."


written by க.முரளி (spark MRL K)

No comments:

Post a Comment